Kaakha Kaakha: அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல்..! சூர்யா சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kaakha Kaakha: அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல்..! சூர்யா சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்

Kaakha Kaakha: அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல்..! சூர்யா சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Aug 01, 2024 06:30 AM IST

விஜய், அஜித், விக்ரம் என முக்கிய ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு அவர்கள் நடிக்க மறுத்து பின்னர் சூர்யா நடித்த காக்க காக்க படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல் சொன்ன படமாக உள்ளது.

அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல், சூர்யா சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்
அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல், சூர்யா சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம்

என்கவுண்டர் பற்றிய கதை

தமிழ் சினிமாவில் புதிதாக பேசப்பட்ட வார்த்தையாக இருந்த போலீஸ் என்கவுண்டர் பற்றிய விறுவிறுப்பான திரைக்கதையுடன் காக்க காக்க படம் அமைந்திருக்கும்.

அன்புச்செல்வன், நகர ஏசிபி அதிகாரி, நேர்மையான, தைரியமான ஐபிஎஸ். குற்றப்பிரிவில் வேலை செய்யும் அதிகாரி. அவருக்கு குடும்ப பின்னணி எதுவும் கிடையாது. அன்புச்செல்வனுக்கு உலகமே அவரது நண்பர்கள் மட்டும் தான். அவர்களும் ஐபிஎஸ் அதிகாரிகள், இளமாறன், அருள் மற்றும் ஸ்ரீகாந்த். இந்தக்குழு சென்னையில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.

சென்னையில் நடக்கும் குற்றங்களுக்கு காரணமாக கேங்ஸ்டர் ரவுடிகளை என்கவுன்டர் செய்வதில் சிறந்தவர்கள். இந்த போலீஸ் அதிகாரிகள் குழு 3 மாதத்தில் 5 ரவுகளை என்கவுன்டர் செய்து சென்னையின் குற்றங்களை குறைத்திருப்பார்கள். இதனால் மனித உரிமை அதிகாரிகள் இவர்களை கன்ட்ரோல் ரூம் பணியில் அமர்த்தியிருப்பார்கள்.

க்ரைம், என்கவுன்ட்டர் என புயலாக பறந்துகொண்டிருக்கும் அன்புச்செல்வன் வாழ்வில், மாயா என்ற பள்ளி ஆசிரியை தென்றலாக நுழைவார். அவரது வாழ்க்கையில் புயல் போல் வில்லனாக பாண்டியன் நுழைவார். இவர்கள் இருவரால் அன்புச்செல்வன் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்கள் தான் படத்தின் கதை.

அதிரடி போலீஸ் கதையில் அழகிய காதல்

சொல்லப்போனால், சூர்யா - ஜோதிகாவின் காதல் பகுதிகள் ஒரு அழகான கவிதை போலவே காட்சிபடுத்தியிருப்பார் இயக்குநர் கெளதம். விஜய், அஜித், விக்ரம் என முக்கிய ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு அவர்கள் நடிக்க மறுத்து பின்னர் சூர்யா நடித்த இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஃபிட் அண்ட் பவர் பேக்கான பர்பார்மன்ஸில் சூர்யா, ஷீ இஸ் எ ஃபேன்டசியாக ஜோதிகா! நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம்னா என்னான்னே தெரியாது. நான் இந்த கண்கள பாத்துகிட்டே இருக்கணும், அப்புறம் ஒரு நாள் செத்து போயிடணும், நச் காதல் வசனங்கள். மெச்சூர்டான ரொமான்ஸ் என அதகளம் செய்ததுடன், அதிரடியாக அசத்திய படம்தான் காக்க காக்க. இந்தப்படத்தில் ஜோதிகா வித்யாசமான மேக்அப்பியில் மிக அழகாக இருப்பார்.

மனதில் ரீங்காரமிடும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை

இன்று வரையிலும் ஃபிரஷ்ஷாக மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் பாடல்களை தனது அற்புத இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்காக கொடுத்திருப்பார். படத்தில் இடம்பெறும் உயிரின் உயிரே, என்னைக்கொஞ்சம் மாற்றி, ஒன்றா, ரெண்டா ஆசைகள், ஒரு ஊரில் அழகே உருவாய், தூது வருமா என அனைத்து பாடல்களுமே இப்போதும் ப்ளே லிஸ்டில் இருப்பவைதான் பாடல்கள் பின்னணி இசையிலும் ஒரு வித அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பார். காக்க காக்க என்றாலே இசையும் நினைவில் வருவதை தவிர்க்க முடியாத அளவில் படத்துடன் பிணைந்து ஹாரிஸ் ஜெயராஜின் இசை இருக்கும்

சூர்யாவுக்கு திருப்புமுனை

சூர்யாவின் கேரியரில் முக்கிய படமாக அவருக்கு திருப்புமுனை தந்த படமாக இருக்கும் காக்க காக்க, ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது. படம் வெளியான காலகட்டத்தில் புதுமையான கதைக்களம், மேக்கிங்கால் ரசிகர்களை ஈர்த்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றது. தெலுங்கு, இந்தி உள்பட பிறமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட மென்மையான காதலும், அதிரடி ஆக்‌ஷனும் நிறைந்த காக்க காக்க படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.