Suriya 45: ரெட்ரோ போல் சூர்யா 45க்கு மாஸ் டைட்டில்.. பொங்கலில் அறிவிக்க பிளான்.. முன்னரே லீக்கானதால் படக்குழு ஷாக்
Suriya 45 Title: பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு ரகசியமாக வைத்திருந்த சூர்யா 45 படத்தின் டைட்டில் லீக்காகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய்யின் மாஸ் படங்களை போல் சூர்யாவின் இந்த பட டைட்டில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சூர்யாவின் கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களால் தோல்வியை தழுவியது. ஓராண்டு இடைவெளிக்கு பின் சூர்யா நடித்து வெளியாகி இருந்த இந்த படம் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த கட்டாய வெற்றியை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் சூர்யா இருந்து வருகிறார்.
இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் புதிய படமான ரெட்ரோ வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டைட்டில் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 45 படம்
இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 45 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அத்துடன் படத்தின் இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜியே, சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறாராம். படம் லீகல் ட்ராமா பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
