பரிசுத்த காதல்.. அதிரடி ஆக்ஷன்.. ரசிகர்களுக்கு சூர்யாவின் கிறிஸ்துமஸ் ட்ரீட் - தெறிக்கவிடும் சூர்யா 44 டைட்டில் டீஸர்
ரசிகர்களுக்கு சூர்யாவின் கிறிஸ்துமஸ் ட்ரீட் சூர்யா 44 டைட்டில் டீஸர். காதல், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதமே நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது டைட்டில் டீஸர் கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக வெளியிடப்பட்டுள்ளது. காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அக்டோபர் மாதம் நிறைவடைந்துள்ளது. முன்னதாக படம் குறித்த அறிவிப்பை டீசர் மூலம் தெரிவித்திருந்தனர்.
தெறிக்கவிடும் டைட்டில் டீஸர்
இதையடுத்து சூர்யா 44 என்ற அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் டீஸர் 2.16 நிமிடங்கள் ஓடுகிறது. படத்துக்கு ரெட்ரோ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சூர்யா - பூஜா ஹெக்டே இடையிலான ரெமான்ஸ் காட்சியுடன் அமைந்திருக்கும் டீஸர், இடையே சூர்யாவில் அதிரடி அவதாரத்தை வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளும் தோன்றும் விதமாக டீஸர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
#Suriya44 என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
சூர்யா நெகிழ்ச்சி
"பல்வேறு லொக்கேஷன்களில் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது. சிறந்த குழு மற்றும் நடிகர்களுடன் மறக்க முடியாச பல நினைவுகள். கார்த்திக் சுப்பராஜ் எனக்கொரு தம்பியாக கிடைத்துள்ளார். சூர்யா44 படம் மூலம் மறக்க முடியாத அனுபவத்தை தந்த படக்குழுவுக்கு நன்றிகள் #ShootWrap" என ரெட்ரோ படத்தின் ஷுட்டிங் முடிவடைந்தது குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
படம் குறித்து கார்த்தி சுப்பராஜ் பேட்டிகளில் கூறியபோது, இதில் சூர்யாவின் கதாபாத்திரம் ரஜினிகாந்தின் ஜானி பட கதாபாத்திரத்தை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் ஜானி படத்தில் பார்பர் கதாபாத்திரத்தில் வரும் வித்யாசாகர் போன்ற லுக்கில் சூர்யாவின் தோற்றம் அமைந்துள்ளது.
ரெட்ரோ திரைப்படம்
கார்த்திக் சுப்பராஜ் சொந்த நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் ஷங்கர் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஷ்ரேயா சரண் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். படத்துக்கு இசை - சந்தோஷ் நாரயணன். இந்த படத்தின் ஸ்டிரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக நடக்கும் டிஷ்கஷன்
ரெட்ரோ படம் குறித்தான சில முக்கிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இந்தப் படம் குறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் பிரபல இணையதளமான விகடன், இந்த படம் சூர்யாவிற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும் போது, "இந்தக் கூட்டணி குறித்தான ரகசியத்தை பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமானது. திரைத்துறையில் தற்போது அதிகமான அளவில் தகவல் கசிவு நடந்து வருகிறது. அதனால் சரியான தருணம் வரும் வரை இந்த கூட்டணி தொடர்பான ரகசியத்தை நாங்கள் பாதுகாத்து வந்தோம்.
இந்தப்படம் தொடர்பான டிஸ்கஷன், சூர்யா சாருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் இடையே கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்துள்ளது. இந்தக் கூட்டணி அவர்களின் கலை குறித்தான பார்வையை உயிர்பிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது" என்று பேசினார்.
இதையடுத்து ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. படம் 2025 மே மாதம் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது