சேதுவில் செதுக்கிய பாலா.. போன் பண்ணா ‘அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு..’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சேதுவில் செதுக்கிய பாலா.. போன் பண்ணா ‘அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு..’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!

சேதுவில் செதுக்கிய பாலா.. போன் பண்ணா ‘அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு..’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 04, 2025 07:28 PM IST

விக்ரம் சார் ஊரில் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அவரை தொடர்பு கொள்ள பல முயற்சிகளை எடுத்தோம். - சுரேஷ் காமாட்சி

சேதுவில் செதுக்கிய பாலா.. போன் பண்ணா ‘அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு..’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!
சேதுவில் செதுக்கிய பாலா.. போன் பண்ணா ‘அவுட் ஆஃப் ஸ்டேஷன்னு..’ - விக்ரம் பாலா 25 க்கு வராதது குறித்து சுரேஷ் காமாட்சி!

விக்ரம் சார் ஊரில் இல்லை

இது குறித்து அவர் பேசும் போது, ‘அவரை பாலா 25 நிகழ்ச்சிக்கு கூட்டி வர நாங்கள் பல கட்ட முயற்சிகளை செய்தோம். ஆம், விக்ரம் சாரை போனில் நேரடியாக தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால் கடைசிவரை, அவரை நெருங்க கூட எங்களால் முடியவில்லை. இதனையடுத்து அவரது மேனேஜரை தொடர்பு கொண்டு, அவரை நிகழ்ச்சிக்கு கொண்டு வர முயற்சி செய்தோம்.

 

ஆனால் அவர் விக்ரம் சார் ஊரில் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அவரை தொடர்பு கொள்ள பல முயற்சிகளை எடுத்தோம். ஆனால் அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.’ என்று பேசினார்.

கண்டுகொள்ளாத விஷால்

விஷாலை போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தோம். ஆனால், போனை கடைசிவரை எடுக்கவே இல்லை; இதனையடுத்து அவருக்கு வாய்ஸ் மெசேஜை அனுப்பினோம். அதற்கு ரிப்ளை இல்லை; இதையடுத்து அவரது மேனேஜருக்கு போன் செய்தோம். ஆனால், அவரும் போனை எடுக்கவில்லை. ஏ.எல். விஜய் மூன்று நாட்கள் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால், அவர்கள் கடைசி வரை போனை எடுக்கவில்லை.

அதர்வா என்ன சொன்னார்

அதர்வாவிற்கு போன் செய்து பாலா 25 நிகழ்ச்சி குறித்து கூறினேன். அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இருப்பதாக கூறினார்; முடிந்தளவு நான் வர முயற்சிக்கிறேன் என்று கூறினார். ஆனால், அவரால் வர முடியவில்லை; முடிந்த மட்டும் பாலாவுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் நாங்கள் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தோம்’ என்று பேசினார்.

முன்னதாக, சினிமாவில், மிக நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருந்த விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பாலா. அதன் பின்னர் பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பிற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் பாலாவும் விக்ரமும் இணையவில்லை.

இதற்கிடையே தன்னுடைய மகனான துருவ் விக்ரமை பாலாதான் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை பாலாவை வைத்து எடுத்தார் விக்ரம். ஆனால், விக்ரமுக்கு திருப்தி தராத காரணத்தால், அந்தப்படம் திரையரங்கில் வெளிவில்லை;

அதன் பின்னர் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநரான சந்திப் ரெட்டி வங்காவின் உதவி இயக்குநரை வைத்து மீண்டும் ஆதித்யா வர்மா என்ற பெயரில் அந்த படம் படமாக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே பாலா இயக்கிய வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அந்தப்படத்திற்கு பாலா கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.