‘சூர்யா வீட்டுப்பக்கத்துல வணங்கான் போஸ்டர ஒட்டாதீங்கன்னு பாலா.. அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்’ - சுரேஷ் காமாட்சி!
ஒருவேளை சூர்யா சார் போஸ்டரை பார்க்கும் பட்சத்தில், நாம் செய்ய இருந்த படம், தற்போது வேறு ஒருவர் செய்திருக்கிறாரே என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி சொல்லி இருக்கிறார் - வணங்கான் சுரேஷ் காமாட்சி!

‘சூர்யா வீட்டுப்பக்கத்துல வணங்கான் போஸ்டர ஒட்டாதீங்கன்னு பாலா.. அப்படியே அதிர்ச்சியாகிட்டேன்’ - சுரேஷ் காமாட்சி!
சூர்யா வீட்டின் அருகில் வணங்கான் படத்தின் போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று பாலா கூறியிருக்கிறார்.
நல்ல புரிதல்
இது குறித்து சுரேஷ் காமாட்சி ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சூர்யா சாருடன் ஏன் வணங்கான் படத்தில் இணைந்து பணியாற்ற வில்லை என்று பாலா அண்ணனிடம் நான் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.
ஆனால், சூர்யா சாருக்கும் பாலா அண்ணனுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத்தெரியும்; இப்போதும் அந்த புரிதல் இருக்கிறது. பாலாவுடன் பணியாற்றிய பல நடிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் விட பாலா அண்ணனுக்கு, சூர்யா சாரின் மீது அக்கறை அதிகம்.