தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ayodhya Ram Temple: 'மகிழ்ச்சி!’ அயோத்தி செல்லும் முன் கபாலியாக கர்ஜித்த ரஜினி! சொன்னது என்ன தெரியுமா?

Ayodhya Ram Temple: 'மகிழ்ச்சி!’ அயோத்தி செல்லும் முன் கபாலியாக கர்ஜித்த ரஜினி! சொன்னது என்ன தெரியுமா?

Kathiravan V HT Tamil
Jan 21, 2024 11:34 AM IST

“Ayodhya Ram Temple function: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது”

அயோத்தி செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு
அயோத்தி செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்காக நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தி வருகிறார். அரசியல், வணிகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு மிக முக்கிய பிரபங்களுக்கு மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மூன்று அடுக்குகளைக் கொண்ட சன்னதியாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலானது ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் கருடன் ஆகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைப் பயன்படுத்தி இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

பாரம்பரிய கட்டட கலை பாணியான நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் கட்டப்பட்டுள்ளது. 

கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டுள்ளது. நிருத்திய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம் ஆகிய ஐந்து மண்டபங்களை கொண்டுள்ள ராமர் கோவிலின் கருவறையில், குழந்தை ராமர் (ராம் லல்லா)  சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 

சென்னை விமான நிலையம் செல்லும் ரஜினிகாந்த் விமானம் மூலம் அயோத்தி செல்கிறார். தமிழ்த் திரையுலகை சேர்ந்த நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபங்களுக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்