Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!

Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 15, 2024 06:10 PM IST

Rajinikanth: ‘கூலி’ படப்பிடிப்பில் ‘வேட்டையன்’ பாடலுக்கு நடனமாடி ரஜினிகாந்த் ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!
Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!

இந்தப்பாடலில் செயற்கை தொழில்நுட்பத்தின் வாயிலாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை கொண்டு வந்திருந்தார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். தீப்தி, யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோரும் இந்தப்பாடலுக்கு குரல் கொடுத்திருந்தார்கள்.

இந்தப்பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ஓணம் பண்டிகையான இன்றைய தினம் கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ரஜினியும், கூலி படக்குழுவும் நடனமாடி வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்துடன் கூலி படத்தின் கேமராமேன் கிரீஷ் கங்காதரன் உட்பட பலரும் நடனம் ஆடுகின்றனர். இதையடுத்து லோகேஷை நடனமாட வரும்படி ரஜினி அழைக்க, அவர் வர மறுத்துவிட்டார். இது தொடர்பான காட்சிகள் அதில் இடம் பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்‌ஷன் உட்படப் பலரும் நடித்துள்ளார்கள்.

4ஆவது முறையாக இணைந்த ரஜினி - அமிதாப்

"வேட்டையன்" படத்தில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் மூத்த வழக்கறிஞராக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்.

அனிருத் இசை

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டு இருக்கிறார். 

முன்னதாக வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

‘வேட்டையன்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.