Rajinikanth:‘ரொம்ப வருத்தமா இருக்கு’;வீடியோவில் முக்கிய செய்தியை பகிர்ந்த ரஜினி!
தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் ஃபுட்பால் அகாடமி வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஃபுட் பாலை கிங் ஆஃப் கேம்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க இது ஒரு காலத்தில் இந்தியாவில் இது மிகவும் பிரபலமாக இருந்தது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரஜினிகாந்த் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியை மனைவி லதாவுடன் நேரில் கண்டுகளித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவியது.
மேலும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர் ரஜினிகாந்த்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் இது ரஜினியின் வழக்கமான சந்திப்பு என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் சென்னையில் கால்பந்து அகாடமி ஒன்று தொடங்க உள்ளார். அதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கும் ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பேசி இருக்கும் அவர், “ தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் ஃபுட்பால் அகாடமி வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஃபுட் பாலை கிங் ஆஃப் கேம்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. இது ஒரு காலத்தில் இந்தியாவில் இது மிகவும் பிரபலமாக இருந்தது.
கிரிக்கெட் வந்த பின்னர் வந்து அது டாமினேட் செய்து விட்டது. இப்போது கொல்கத்தா, கேரளாவில் ஃபுட் பால் அதிகம் விளையாடப்பட்டு வருகிறது; அங்கு ஃபுட் பால் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது.
கடைசியாக நடந்த உலககோப்பை ஃபுட் பால் போட்டிகளை பார்க்காதவர்கள் கிடையாது. ஃபுட் பால் ஸ்கில்லுடன் ஆடக் கூடிய வீர விளையாட்டு.
சின்னச் சின்ன நாடுகள் கூட ஃபுட் பால் விளையாடி உலகத்துக்கு தெரிகின்றன. ஆனால் இந்தியா ஃபுட் பால் விளையாட்டில் இன்னும் பேர் வாங்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.
இதனால் யூத் ஃபுட் பால் அகாடமி நிச்சயம் வரவேற்கத்தக்கது. சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டு ஆகியோரை இந்த அகாடமி கொடுக்கணும்'' என்று அதில் அவர் பேசியிருக்கிறார்.