Rajinikanth: ஒரு வேளை இருக்குமோ? - ரஜினியுடன் இணையும் மாரி செல்வராஜ்?
இதற்கிடையே அவர் இயக்கிய வாழைத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்; தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்; இந்த இரண்டு படங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் அடக்குமுறையை அவர் காட்சிப்படுத்தி இருந்தார்.
இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்தப்படமும் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.
இதற்கிடையே அவர் இயக்கிய வாழைத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தை எடுத்த ஞானவேல் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாமும் பொங்கல் ரேசில் களமிறங்க இருக்கிறது.

டாபிக்ஸ்