Rajinikanth: க்ரயா யோகா ஒரு ரகசிய டெக்னிக்.. அந்த பவர் தெரிஞ்சவங்களுக்கு தெரியும் - ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்
Rajinikanth: க்ரயா யோகா ஒரு ரகசிய டெக்னிக். இதோட பவர் தெரிஞ்சவங்களுக்கு நன்கு தெரியும். வருஷத்துக்கு ஒரு முறை ராஞ்சியில் இருக்கும் ஆசிரமம் சென்று க்ரயா யோகா பயிற்சி செய்யலாம்னு முடிவுல இருக்கேன் என்று தனது ஆன்மீக அனுபவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் ஷுட்டிங்குக்கு இடையே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒய்எஸ்எஸ் ஆசிரமத்துக்கு விசிட் அடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அங்கு க்ரயா யோகா பயிற்சி மேற்கொண்டிருக்கும் அவர், அதன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இனி ஆண்டுதோறும் கிரயா யோகா பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
க்ரயா யோகா அனுபவம் தொடர்பாக வீடியோவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, "நான் ராஞ்சி ஒய்எஸ்எஸ் ஆசிரம்மதில் இருக்கிறேன். மூன்றாவது தடவை இங்கு வந்துள்ளேன். முதல் முறையாக 2002இல் வந்தேன். இரண்டாவதாக வரும்போது கூட இவ்வளவு விஷயங்களை பார்க்கவில்லை. இந்த முறை கடவுள் மற்றும் குருவின் அருளாள் இரண்டு நாள் கள் இங்கே இருந்து ஆஷரமம் முழுமையா பார்த்த நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைச்சது.
வைப் கிடைத்தது
குறிப்பாக குருவின் அறையில் தியானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தியானத்தில் இருந்தபோது அந்த அனுபவத்தை வர்ணிக்க முடியாது. ஒரு மணி நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. மற்றவர்கள் எழுப்பிய பின் தான் தெரிந்தது. அந்த மாதிரியான வைப் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது
20 வருஷமா பன்றேன்
க்ரயா யோகா பத்தி சொல்லனும்னா, என்னை பார்க்கிறவங்க எல்லாரும் ரொம்ப வைப்ரண்ட் ஆக இருக்கிறீர்கள், உங்களை பார்த்தாலே பாசிடிவ் ஆக இருக்கிறது என சொல்கிறார்கள். அதன் சீகரட்டே நான் க்ரயா யோகா பண்ணிகிட்டு இருக்கிறது தான்.
க்ரயா பண்ண ஆரம்பிச்சதில் இருந்து எனக்குள்ள எத்தனை மாற்றங்கள் என்பதை சொல்லவே முடியலே. அது ஒரு விதமான அமைதி. 2002இல் இருந்து நான் பயிற்சியை தொடங்கினேன். இப்போ 20 வருஷங்களுக்கு மேல் ஆகிடுச்சு.
தொடர்ச்சியா நான் பண்ணிட்டேன் இருந்தேன். எந்த மாற்றமும் தெரியவில்லை. சில சமயங்கள் எனக்கு சந்தேகங்கள் வந்ததுண்டு. இவ்வளவு முறை செய்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என சந்தேகம் இருந்து கொண்ட இருந்தது. இருந்தாலும் தொடங்கியாச்சு என செய்துகொண்டேன் இருந்தேன்
மிதக்கிற மாதிரி உணர்வு
ஒரு பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து தான் அதன் தாக்கம் தெரிந்தது. எனக்குள்ளே ஒரு மாதிரியான நிம்மதி பிறந்தது. இந்த உலகத்தில் இருந்தும் ஈடுபாடு இல்லாமல், தனியாக இருப்பது போன்ற உணர்வு இருந்தது. நாம் கஷ்டப்படாமலேயே தானாக நடந்தது. மிதக்கிற மாதிரி உணர்வு இருக்கிறது.
குரு ஒரு முறை நம் கையை பிடித்துவிட்டார்னா, நாம விட்டாலும் அவங்க விடமாட்டாங்க. அவங்க கூடவே கூட்டிட்டு போவாங்க.
க்ரயா ரகசிய டெக்னிக்
க்ரயாவின் அந்த பவர் தெரிஞ்சவங்களுக்கு தெரியும். ஏனென்னா இது ஒரு ரகசிய டெக்னிக். எல்லோருக்கும் பயன்படும் விதமாக பாபாஜி, யோகாநந்தா மூலமா கொண்டு வந்துருக்காங்க. இதை யாரு தெரிஞ்சுகிறாங்களோ அவங்க கொடுத்து வச்சவங்கள், ஜென்மத்தில் இருந்து பந்தமாக கருதப்படுகிறது.
க்ரயா பண்ணாதான் அதன் அனுபவம் தெரியும். இங்க வந்தா, போறதுக்கே மனசு இல்ல. 14 வருஷம் கழிச்சு வரேன். இனி ஒவ்வொரு வருஷமும் இங்கு வந்து, குறைஞ்சது 10 நாள்கள் இருந்து போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்" என்று பேசியுள்ளார்.
கூலி படம் ரிலீஸ் தேதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது நடித்து வரும் கூலி திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. படத்தில் தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனா, பாலிவுட் நடிகர் அமீர்கான், சத்யராஜ் உள்பட பலரும் நடிக்கிறார்கள். நடிகை ஸ்ருதிஹாசன், முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்.
தங்க கடத்தலை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் அமைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டிலேயே படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 70 சதவீதம் முடிந்திருப்பதாக சமீபத்தில் செய்தியாளரகளிடம் தெரிவித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதைத்தொடர்ந்து படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்