Rajinikanth: மாரிசெல்வராஜ் மேஜிக்.. ரஜினி படத்தில் விஜய் தயாரிப்பாளர்! - ரஜினி 172 படத்தின் விபரம்!
உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்தப்படமும் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ்; தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்; இந்த இரண்டு படங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் அடக்குமுறையை அவர் காட்சிப்படுத்தி இருந்தார்.
இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்தப்படமும் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது. இதற்கிடையே அவர் இயக்கிய வாழைத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென்று முன்னதாக வெளியான மாரிசெல்வராஜ், நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான புகைப்படம் வைரலானது.
இதன் மூலம் ரஜினி நடிக்கும் படத்தை மாரிசெல்வராஜ் இயக்குகிறாரா? என்ற கேள்வி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தா.செ. ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை முடித்த உடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதனை தொடர்ந்துதான் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தை லியோ’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம்.
டாபிக்ஸ்