Super Singer Malavika: ‘தாலி எனக்கு செட் ஆகலன்னு.. பொண்ணுங்க மட்டும் ஏன் அந்த மாதிரி..’ - மாளவிகா!
அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களிடம் நான் எனக்குத் தோன்றும் பொழுது தாலி அணிந்து கொள்கிறேன் என்பேன்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் வாயிலாக பிரபலமான மாளவிகா. இவர் தன்னுடைய காதலரான அஸ்வினை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.
அதில் அவர் பேசும் போது, “எக்கச்சக்க பேர் நான் ஏன் தாலி அணிந்து கொள்ளவில்லை என்று கேட்டிருக்கிறார்கள். என்னுடைய அம்மா கூட அது குறித்து கேட்பார்.
ஆனால் அஷ்வின் ஒரு நாள் கூட நீ தாலி அணிந்து கொள் பொட்டு வைத்துக் கொள்.. என்றெல்லாம் சொன்னதே இல்லை. என்னுடைய மாமியார் இதுகுறித்து என்னிடம் கேட்பார். இங்கு சமுதாயம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த கட்டமைப்பில் நாங்கள் இல்லை. அதனால் எங்களை யாராவது தவறாக பேசிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்.
அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களிடம் நான் எனக்குத் தோன்றும் பொழுது தாலி அணிந்து கொள்கிறேன் என்பேன்.
இன்னொன்று எல்லோருக்கும் நாம் அதற்கான காரணத்தை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஒருமுறை நான் ஏதோ ஒரு ஆடை அணிந்து நின்று கொண்டிருந்தேன்.
அப்போது நான் தாலி அணிந்திருந்தேன். அதை பார்த்த அஸ்வின், இந்த ஆடைக்கு அது சூட்டாகவில்லையே என்று சொன்னான். கல்யாணமான ஒரு வருடத்திலேயே குழந்தை எங்கே என்று கேட்பார்கள். ஆனால் என் குடும்பத்தில் அப்படி யாரும் என்னை கேட்கவில்லை. பொதுவாகவே குழந்தை தொடர்பான கேள்விகள் அனைத்துமே பெண்களிடமே வைக்கப்படுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது இரண்டு பேரும் சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கையில் இந்தக்கேள்வி ஏன் பெண்களிடமே வைக்கப்படுகிறது.
நானோ நீங்களோ நினைத்து மட்டும் இந்த உலகத்தை மாற்றி விட முடியாது. என்னுடைய மாமியாரிடமே இதைப்பற்றி என்னிடம் இனி பேசாதீர்கள் என்று சொல்லி விட்டேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்