Kadukkai Benefits: பயன்கள் கோடிதான்.. ஆனா.. - கடுக்காயில் எதை சாப்பிடக்கூடாது தெரியுமா?
கடுக்காய் தோல் செரிமான பிரச்சினையை குறைப்பதோடு மலச்சிக்கலை தடுக்கும்.அதே போல மலம் அதிகமாகச் சென்றாலும்,அதனையும் தடுக்கும். உடலின் சர்க்கரையின் அளவை குறைக்கும். உடல் எடையை குறைக்கும்
கடுக்காய் பொடியின் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
சித்த மருத்துவத்தில் காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்ற பழமொழியே இருக்கிறது. இந்த மூன்று உணவு பொருட்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கடுக்காய்க்குத்தான். கடுக்காயின் அறு சுவையும் இருக்கிறது.
கடுக்காய் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு பயன்படுகிறது. இஞ்சி,சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை நாம் சேர்த்துக் கொள்ளும் பொழுது, கூடவே ஆரோக்கியமான உணவுகளான கேழ்வரகு, முருங்கைப்பூ, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களையும் நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கடுக்காய் தோல் செரிமான பிரச்சினையை குறைப்பதோடு மலச்சிக்கலை தடுக்கும்.அதே போல மலம் அதிகமாகச் சென்றாலும்,அதனையும் தடுக்கும். உடலின் சர்க்கரையின் அளவை குறைக்கும். உடல் எடையை குறைக்கும்.
கடுக்காயுடைய கொட்டையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. கடுக்காயை உடைத்தால் உள்ளிருக்கும் விதையின் மேல் ஒரு தோடு இருக்கும். அதைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். 40, 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கடுக்காயை தினமும் எடுக்கலாம். கடுக்காய் வாய்ப்புண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.
மூன்று கடுக்காய் தோலுடன்,இஞ்சி, மிளகாய்,புளி உளுந்து இவையனைத்தையும் சேர்த்து, அதனை நெய்யில் வதக்கி, அதனுடன் உப்பு சேர்த்து துவையல் செய்தும் சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்