வயிற்றில் இறங்கிய கத்தி.. அடம் பிடிக்கும் அண்ணன் பாசம்.. தகதமி ஆடிய தயாளன்! - கயல் சீரியல் அப்டேட்
கயல் சீரியலில் தயாளன் அனுப்பிய ஆட்கள் மூர்த்தியை கத்தியால் குத்திவிட்டனர். ஆனால், கயல் அண்ணன் வந்தால் மட்டுமே மணமேடைக்கு செல்வேன் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறாள்

கயல் சீரியலில் இன்றைக்கு வெளியான ப்ரோமோவில், கயல் தர்மலிங்கத்தின் காலிலும்,வடிவின் காலிலும், விழுந்து மன்னிப்புக்கேட்ட நிலையில், அவர்கள் மனம் இறங்கி கயலின் கல்யாணம் எப்படியாவது நடக்க வேண்டும் என்று விரும்பினர் இதற்கிடையே, வீட்டை விட்டு வெளியே சென்ற கயலின் அண்ணன் மூர்த்தியை தயாளன் அமர்த்திய ரவுடிகள் கத்தியால் குத்தி விட்டனர். இது தெரியாமல் இங்கே அண்ணன் வந்தால் மட்டுமே நான் மணமேடைக்கு வருவேன் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறாள் கயல். இவை தொடர்பான காட்சிகள் ப்ரோமோ வில் இடம் பெற்று இருக்கின்றன.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதுதான் இன்றைய எபிசோடில் இடம் பெற இருக்கிறது
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கயல் சீரியலில் கடந்த எபிசோடில் ஒரு வழியாக எல்லா பிரச்சினைகளையும் தாண்டி கயல் கல்யாணம் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் தன் மீது கோபம் கொண்டு தன்னுடைய கல்யாணத்திற்கு பல இடையூறுகளை செய்த தர்மலிங்கம் மற்றும் வடிவிடம் கயல் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டாள்.