Oh my Ghost Trailer:ராணியாக சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் ட்ரெய்லர் வெளியீடு
பாலிவுட் கவர்ச்சி நாயகியான ஸ்டைலிஷ் நாயகி என்ற அடைமொழியுடன் தமிழில் கதையின் நாயகியாக ஓ மை கோஸ்ட் படத்தில் அறிமுகமாகியுள்ளார். இதில் அவர் ராணி கதாபாத்திரத்தில் தோன்றி கவர்ச்சியும், அதிரடியும் காட்டியுள்ளார்.
சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழும் சன்னி லியோன் இதற்கு முன்னதாக தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பிடித்த குத்து பாடலுக்கு நடனமாடினார். இதைத்தொடர்ந்து வி.சி. வடிவுடையான இயக்கத்தில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து சிந்தனை செய் பட இயக்குநர் ஆர் யுவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கதையின் நாயகியாக சன்னி லியோன் நடித்துள்ளார். படத்தில் ராணி கதாபாத்திரத்தில் தோன்றும் அவர் கவர்ச்சி விருந்தோடு, அதிரடி சண்டை காட்சிகளிலும் அலப்பறை செய்துள்ளார்.
படத்தில் யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். அதேபோல் டிக் டாக் ஸ்டாரான ஜிபி முத்துவும் படத்தில் நடித்துள்ளார். ஹாரர், ஆக்ஷன், காமெடி கலந்த படமாக உருவாகியிருக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
OMG என்றும் அழைக்கப்படும் இந்த படம் மூலம் சன்னி லியோன் கதையின் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். படத்தில் அவருக்கு ஸ்டைலிஷ் நாயகி என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த சன்னி லியோன், தமிழில் ஸ்டைலிஷ் நாயகியாக களமிறங்கியுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியிடப்படும் என தெரிகிறது.