சன்னி லியோன் பெயரில் மோசடி.. சத்தீஸ்கரில் திடீர் கணவர்! சத்தீஸ்கர் அரசிடம் இருந்து உதவித்தொகை பெறுகிறாரா சன்னி லியோன்?
சத்தீஸ்கர் மாநிலத்தின் தகுதியான மகளிர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் பஸ்தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 10 மாதங்களாக பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
ஒரு அரசின் நலத்திட்டம் சிறப்பான பலன்களை தரும் போது அதனை மற்ற அரசுகளும் பின்பற்றுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வரிசையில் தமிழ்நாட்டி ஒரு திட்டத்தை பல மாநிலங்கள் பின்பற்றுகிறது என்றால் அது தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தை முதன் முதலில் கூறியது தமிழ்நாடு அரசு தான். ஆனால் தற்போது இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இப்பொழுது இந்த திட்டத்தில் தான் ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.
ஒரு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முன் தெளிவாக விசாரித்து அணைத்து ஆவணங்களையும் சரிபார்த்து அதன் பின்னரே அந்த பயனாளருக்கு அந்த உதவி வழங்கப்பட வேண்டும். இது அந்த பயனாளரை தகுதி உள்ள நபர் தான் என உறுதி படுத்தவே தவிர அவர அலைக்கழிக்க வைக்க இல்லை. ஏனென்றால் தான் பயனாளர் என கூறி தகுதி இல்லாத நபர் அந்த பலனை அடையக்கூடாது. இதனை தடுக்க வேண்டுமென்றால் தீர ஆராய்வது அவசியம். ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழந்துள்ள சம்பவம் இந்த விசாரணையை கேள்வி குறியாக்கியுள்ளது.
சன்னி லியோனிற்கு உதவித் தொகை
பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன், இந்தியாவில் சில பாடல்கள் மற்றும் சில படங்களில் நடித்து இந்திய ரசிகர்களிடையே பிரபல அடைந்துள்ளார். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும் உதவி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் சத்தீஸ்கர் மாநிலம் வழங்கும் ரூ.1000 உதவித் தொகையை பெற்று வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இந்த மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலின் போதும் மகளிர் உரிமைத் தொகை குறித்து வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு இந்த திட்டம் மஹ்தாரி வந்தனா யோஜனா (Mahtari Vandan Yojana)என்ற பெயரில் செயல்முறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தகுதியான மகளிர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் பஸ்தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 10 மாதங்களாக பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
சத்தீஸ்கரில் (Chhattisgarh) உள்ள பாஸ்டர் பகுதியில் இருக்கும் தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த மாவட்ட ஆட்சியர் ஹரீஷ், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையிடம் இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது மட்டுமின்றி, அந்த வங்கிக் கணக்கையும் முடக்க உத்தரவிட்டுள்ளார்.அந்த நபர் தனது பெயர் சன்னி லியோன் என்றும், கணவர் பெயர் ஜானி சின்ஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் இதனை அந்த அதிகாரிகள் இரண்டு முறை விசாரிக்கும் போதும் கூட பெயரை நீக்காமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்