தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sunny Leone: சன்னி லியோனின் டேட்டிங் ரியாலிட்டி ஷோ! விரைவில் தமிழிலிலும் ஒளிபரப்பு

Sunny Leone: சன்னி லியோனின் டேட்டிங் ரியாலிட்டி ஷோ! விரைவில் தமிழிலிலும் ஒளிபரப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 09:02 PM IST

சன்னி லியோன் தொகுத்து வழங்க, எம்டிவியில் ஒளிபரப்பாகும் டேட்டிங் ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் ஸ்பில்ட்ஸ்வில்லா, ஜியோ சினிமாவில் விரைவில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.

டேட்டிங் ஷோ மூலம் தமிழுக்கு வரும் சன்னி லியோன்
டேட்டிங் ஷோ மூலம் தமிழுக்கு வரும் சன்னி லியோன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 15

எம்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல டேட்டிங் ஷோவாக ஸ்பிலிட்ஸ்வில்லா இருந்து வருகிறது. ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 14 நிகழ்ச்சி 2022 நவம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகரும், டிவி பிரபலமுமான அர்ஜுன் பிஜலானியுடன் இணைந்து தொகுத்து வழங்கினார் சன்னி லியோன்.

இதைத்தொடர்ந்து ஸ்பில்டஸ்வில்லா 15 சீசன் இந்தியில் ஒளிபர்பபாகி வருகிறது.

இதையடுத்து இந்த டேட்டிங் நிகழ்ச்சியை முதல் முறையாக தமிழிலும் ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த சீசனை பாலிவுட் நடிகர், மாடல் தனுஜ் விர்வானியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் சன்னி லியோன். மொத்தம் 31 போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றுள்ளார்கள். அத்துடன் இந்த புதிய சீசனில் புதுமையான, மற்றும் சுவாரஸ்யமான சில விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பல்வேறு போட்டிகள், எமோஷனல் தருணங்கள் போன்றவற்றை கடந்த தங்களுக்கு ஏற்ற சிறந்த ஜோடியை தேர்வு செய்வார்கள். இறுதியில் சிறந்த ஜோடியாக இருப்பவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

டேட்டிங் பற்றிய புதிய கண்ணோட்டம்

இந்த ஷோ குறித்து சன்னி லியோன் கூறியதாவது, "எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோ உறவுகளுக்கு இடையிலான அன்பின் வளர்ச்சி காட்டும் பிரதிபலிப்பாக உள்ளது. உறவுகளில் இருப்பது, காலத்துக்கு ஏற்ப உறவுகளுக்கு இடையே மாறிவரும் போக்குகளால் இந்த ஷோ இணைக்கப்பட்டுள்ளது. டேட்டிங் பற்றிய நவீன கண்ணோட்டம் மற்றும் விதிகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதுடன் இது எதிரொலிக்கிறது.

இந்த சீசனின் தீம் ஆக இருந்து வரும் 'ExSqueeze Me Please' பல்வேறு திருப்பங்களுடன் ரசிகர்களுக்க உற்சாகத்தை அளிக்கும்" என்றார்.

இந்த ஷோவை முதல் முறையாக தொகுத்து வழங்கும் தனுஜ் விர்வானி, " இந்த நிகழ்ச்சியை பின்தொடரும் நான் இந்தியாவின் டேட்டிங் ரியாலிட்டி தொடரை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். புனைகதை உலகில் இருந்து புனைகதை அல்லாத நிகழ்ச்சிகளில் காலடி எடுத்து வைத்துள்ளேன். ஒருவரின் அன்பை பெறுவதற்காக போட்டியாளர்கள் எப்படியெல்லாம் விளையாட போகிறார்கள் என்பதை காண ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

தீம் பாடல்

ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 15 தீம் விளக்கப்படும் விதமாக பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அல்தாஃப் ராஜா மற்றும் ஆகாசா சிங் பாடியுள்ள இந்தப் பாடல், ‘ஸ்பிளிட்ஸ்வில்லா’ சீசனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காண்போருக்கு புரியவைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு எம்டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு ஜியோ சினிமாவில் ஸ்டீரிம் செய்யப்படவுள்ளது.

ஸ்பில்ட்வில்லா நிகழ்ச்சி

2008 முதல் எம்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த டேட்டிங் நிகழ்ச்சி, நிஜ உலகத்திலிருந்து பிரிந்து இருக்கும் ஸ்பிளிட்ஸ்வில்லா என்ற வில்லாவில் ஒரு இடத்தைப் பெற முயற்சிக்கும் இளைஞர்களையும் பெண்களையும் சுற்றி நகரும். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகளை செய்து, சக போட்டியாளர்களின் அன்பை பெறுவதும், அவருடன் அவர் எப்படி இணைகிறார் என்பதையும் பொருத்து அமைந்துள்ளது. இறுதியில் சிறந்த ஜோடி வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார்கள். ஜென் இஸ்ட் தலைமுறையினர் காதல், உறவுகள் குறித்த புரிதல்களையும் இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்