நடிகை சன்னி லியோனிற்கு மீண்டும் திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்! அவரே சொன்னது என்ன தெரியுமா?
பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவரது கணவரை மீண்டும் திருமணம் செய்துள்ளார். அவரகளது மூன்று குழந்தைகளின் முன்னிலையில் மாலத்தீவில் வைத்து திருமணம் நடைபெற்றதாக இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டுள்ளார்.
சன்னி லியோனின் இயற்பெயர் கரெஞ்சித் கவுர் வோரா ஆகும். இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார். இவர் முதன் முதலாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிஸ்ம் 2 என்ற திரைப்படம் மூலம் பாலிவுடில் அறிமுகமானார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது. ஹிந்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் வலம்வந்த இவர், 2014-ம் ஆண்டு தமிழில் வடகறி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் தொகுப்பாளர், செய்தியாளர், போட்டியாளர் என நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
தற்போது நடிகை சன்னி லியோன் அவரது கணவரை மீண்டும் திருமணம் செய்துள்ளார். அவர்களது மூன்று குழந்தைகளின் முன்னிலையில் மாலத்தீவில் வைத்து திருமணம் நடைபெற்றதாக இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டுள்ளார். இவரது திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய திரையுலகில் சென்சேஷனல் ஹீரோயினாக இருப்பவர் தான் சன்னி லியோன். இவர் முன்னதாக பார்ன் படங்களில் நடித்து வந்தார். பின்னர் அதிலிருந்து முற்றிலும் வெளியேறி இந்தி படங்களில் நடித்து வந்தார். இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
13 வருட திருமண வாழ்க்கை
நடிகை சன்னி லியோன் கடந்த 2011 ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது கணவருடன் திருமண உறுதிமொழியை புதுப்பித்துள்ளார். மாலத்தீவில் நடந்த ஒரு திருமண விழாவில் தம்பதியினர் புதியதாக உறுதிமொழி ஏற்றதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவரும் அவர்களது மூன்று குழந்தைகளான நிஷா, நோவா மற்றும் ஆஷர் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர்.
சன்னியும் டேனியலும்
மாலத்தீவில் நடந்த விழாவில் குடும்பத்தின் அதிர்ச்சியூட்டும் புதிய படங்களையும் சன்னி பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டு உள்ளனர்.மேலும் அவரது குழந்தைகளும் வெள்ளை நிற ஆடைகளில் இருந்தனர். சன்னி வெள்ளை நிற கவுனில், பூக்களுடன் அழகாகத் தெரிந்தார், டேனியல் ஒரு வெள்ளை சட்டையும் ஒரு ஜோடி வெள்ளை பாண்டையும் அணிந்து இருந்தார. சன்னி மற்றும் டேனியல் தங்கள் மூன்று குழந்தைகளுடன் மற்றொரு படத்திற்கு போஸ் கொடுத்தனர். விழாவின் போது டேனியல் சன்னிக்கு புதிய மோதிரத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சன்னி 2011 இல் அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் டேனியலை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். ஜூலை 2017 இல், தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர் கிராமத்தில் இருந்து தத்தெடுத்தனர். நிஷா கவுர் வெபர் என்று பெயரிடப்பட்ட அந்த பெண் குழந்தை தத்தெடுக்கும் போது 21 மாதங்கள் ஆகின்றன. இதனையடுத்து மார்ச் 4, 2018 அன்று, வாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக சன்னி மற்றும் டேனியல் அறிவித்தனர்.
டாபிக்ஸ்