நாமினேஷன் செய்தவரை அடிக்கப் பாய்ந்த சுனிதா.. ஒரு மாதிரி கேம் விளையாடும் முத்து.. பிக்பாஸில் வெறியான போட்டியாளர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாமினேஷன் செய்தவரை அடிக்கப் பாய்ந்த சுனிதா.. ஒரு மாதிரி கேம் விளையாடும் முத்து.. பிக்பாஸில் வெறியான போட்டியாளர்கள்

நாமினேஷன் செய்தவரை அடிக்கப் பாய்ந்த சுனிதா.. ஒரு மாதிரி கேம் விளையாடும் முத்து.. பிக்பாஸில் வெறியான போட்டியாளர்கள்

Malavica Natarajan HT Tamil
Nov 04, 2024 01:58 PM IST

பிக்பாஸ் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த ராணவ் சுனிதாவை நாமினேஷன் செய்ததால், சுனிதா அவரிடம் அதுபற்றி கேட்டு விளையாட்டாக அவரை அடிக்க பாய்ந்தார்.

நாமினேஷன் செய்தவரை அடிக்கப் பாய்ந்த சுனிதா.. ஒரு மாதிரி கேம் விளையாடும் முத்து.. பிக்பாஸில் வெறியான போட்டியாளர்கள்
நாமினேஷன் செய்தவரை அடிக்கப் பாய்ந்த சுனிதா.. ஒரு மாதிரி கேம் விளையாடும் முத்து.. பிக்பாஸில் வெறியான போட்டியாளர்கள்

இவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே சில டாஸ்க்குகளைக் கொடுத்து அனுப்பி பஞ்சாயத்தை ஆரம்பித்தது பிக்பாஸ்.

முதல் ஓபன் நாமினேஷன்

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8ல் முதல்முறையாக இன்று ஓபன் நாமினேஷன் நடந்தது. அதில், வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்தனர்.

இதையடுத்து, இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற போட்டியாளர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்துள்ளது. அதில், கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, ஆனந்தி, அன்ஷிதா, சுனிதா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது .

அடிக்கப் பாய்ந்த சுனிதா

இதையடுத்து, சுனிதா தன்னை நாமினேட் செய்த ராணவ்வை எதுக்கு என்ன நாமினேட் பண்ண? உங்களால தான் நான் இப்போ நாமினேஷனுக்கு போயிருக்கேன் என சிரித்துக் கொண்டே சண்டையிட்டு அவரை அடிக்கச் சென்றுள்ளார்.

அதேசமயம், பவித்ரா அவரது கேமை இனி எப்படி விளையாட வேண்டும் என்பதை சிவா கூறிவருகிறார். உங்களுக்கு என ஒரு சிந்தனை இருக்கும். அதை நீங்கள் பேச வேண்டும். மற்றவர்கள் பேசுவதற்காக மட்டும் நீங்கள் விளையாட வந்தீர்களா என கேள்வி எழுப்பினார்.

முத்துவால் காண்டாகும் தர்ஷிகா

இதைத் தொடர்ந்து, ஓபன் நாமினேஷன் குறித்து தர்ஷிகாவும், சௌந்தர்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, என்னைக்காவது ஒருநாள் ஓபன் நாமினேஷன் வைக்கனணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ, தான் நாம சொல்ற பாயிண்ட் நெத்தியடியா இருக்கும். அவன் ஒரு மாதிரி கேம் விளையாடுறான் என இருவரும் பேசி வருகின்றனர். இதுதொடர்பான ப்ரோமை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

முழுமையாக விளையாடாத தீபக்

இந்த வீடியோவில் முதலில் வந்த ரியா தீபக்கை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த மஞ்சரியும் தீபக்கை நாமினேட் செய்துள்ளார். தீபக் இன்னும் அழரது முழுமையான கேமை விளையாடவில்லை எனக் கூறி இந்த நாமினேஷனை கூறியுள்ளார்.

அடுத்ததாக வந்த சிவா, சாச்சனாவை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த ரயனும் சாச்சனாவை நாமினேட் செய்து, அவர் பல இடங்களில் கம்ஃபெர்ட்டாகவே இல்லை எனக் கூறியுள்ளார்.

ஓவர் ஷாடோ சுனிதா

பின்னர் வந்த அருண், சுனிதாவை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த ராணவ்வும் சுனிதா ஒரு விஷயத்தை ஓவர் ஷாடோ செய்கிறார் எனக் கூறி அவரை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த வர்ஷினி அருணை நாமினேட் செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து வந்த அன்ஷிதாவும் அருணை நாமினேட் செய்து, அவர் ஒளிந்து கேம் விளையாடுகிறார் என விமர்சித்தார்.

இந்நிலையில், புதிதாக வந்த போட்டியாளர்கள் பழைய போட்டியாளர்களின் மத்தியில் தனியாக தெரிய வேண்டும் எனவும் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இனிவரும் நாட்கள் பிக் பாஸ் சீசன் 8 அதிக சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.