Sundar C Speech: ‘உதயநிதிக்கு பிடிக்காத கதையில் ஹிட் அடித்தேன்’ -சுந்தர் சி!
Director Sundar C On Udhayanidhi stalin: ‘சினிமாவுக்கு கலங்கரை விளக்கு மாதிரி ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் உள்ளது. எத்தனையோ தயாரிப்பாளர்கள், நிம்மதியாக படம் பண்ண காரணமாக இருப்பது ரெட்ஜெய்ண்ட் தான்’ -சுந்தர் சி

ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் சுந்தர் சி. இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை தந்து கொண்டிருக்கும் சுந்தர் சி, சமீபத்தில் உதயநிதி பங்கேற்ற படவிழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சுந்தர் சி, தனது நிறைவேறாத ஆசைகள் பற்றி பேசினார். இதோ அவரது பேச்சு:
‘‘நான் படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு, பண்ண முடியாமல் போன இரு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஒன்று விஜய் சார், மற்றொன்று உதயநிதி சார். எனக்கு உதயநிதி சாருடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு வந்தது. அதற்கான ஐடியாவும் உதயநிதி தான் தந்தார் .
இயக்குனர் ராஜேஷ் சாரின் கருவில், உதயநிதி சாரோடு ஐடியாவில் ஒரு கதை கொடுத்தார். நான் அவருக்கு பிடிக்காத மாதிரி, ஸ்கிரிப்டை கொஞ்சம் டெவலப் பண்ணிட்டேன். அதனால் அவருடன் படம் பண்ண முடியாமல் போனது.

