Director Sundar C: மயங்கி கிடந்த விஷால்.. 30 வருடமாகியும்.. எனக்கு ஏற்பட்ட வருத்தம் - சுந்தர் சி எமோஷனல் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Sundar C: மயங்கி கிடந்த விஷால்.. 30 வருடமாகியும்.. எனக்கு ஏற்பட்ட வருத்தம் - சுந்தர் சி எமோஷனல் பேச்சு

Director Sundar C: மயங்கி கிடந்த விஷால்.. 30 வருடமாகியும்.. எனக்கு ஏற்பட்ட வருத்தம் - சுந்தர் சி எமோஷனல் பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 18, 2025 07:01 AM IST

Director Sundar C: தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பயணித்து பல கமர்ஷியல் படங்கள் கொடுத்தும், நல்ல இயக்குநர்கள் லிஸ்டில் என் பெயர் இல்லாதது வருத்தமாக உள்ளது என மதகஜ ராஜா சக்சஸ் மீட்டில் இயக்குநர் சுந்தர் சி எமோஷலாக பேசியுள்ளார்.

மயங்கி கிடந்த விஷால்.. 30 வருடமாகியும்.. எனக்கு ஏற்பட்ட வருத்தம் - சுந்தர் சி எமோஷனல் பேச்சு
மயங்கி கிடந்த விஷால்.. 30 வருடமாகியும்.. எனக்கு ஏற்பட்ட வருத்தம் - சுந்தர் சி எமோஷனல் பேச்சு

2013ஆம் ஆண்டிலேயே வெளிவர வேண்டிய இந்த படம் பெட்டிக்குள் இத்தனை நாள் முடங்கி கிடந்த நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. இதையடுத்து படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், நடிகை அஞ்சலி, இயக்குநர் சுந்தர் சி, இசையமைப்பாளர் உள்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

விழாவில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது, "இதுவரை நான் எந்தப் படத்துக்​கும் சக்சஸ் மீட் வைத்​த​தில்லை. ‘அரண்மனை 4’ படத்​துக்​கு கூட கேட்​டார்​கள். ஆனால், மதகஜராஜா படத்துக்கு சக்சஸ் மீட் வைப்பதற்குக் காரணம், மற்ற படங்களை விட சிறப்பு வாய்ந்​தது. 12 வருடம் கழித்து வருவதால் என்ன சாதித்து​விட போகிறது என்று பலரும் சொன்​னார்​கள். ஆனால் படத்​தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்​தது. ரசிகர்கள் வெற்றியடைய வைத்​திருக்கிறார்​கள். இது மிகப்​பெரிய வெற்றி. இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மிகவும் பெரிய விஷயம்.

மயங்கி கிடந்த விஷால்

இந்த படத்​துக்காக விஷால் அதிகம் கஷ்டப்​பட்​டிருக்​கிறார். ஒரு நாள் விஷாலின் டிரைவர் போன் பண்ணி, சார், கார்ல மயங்கி விழுந்​துட்​டார் என்று சொன்னார். போய் பார்த்​தால் மயங்​கிக் கிடந்​தார். அந்த அளவுக்கு கடுமையான உழைப்​பைக் கொடுத்​தார். அவர் பட்ட கஷ்டத்​துக்கு இந்த வெற்றி பெரிய மருந்தாக அமைந்​திருக்​கிறது.

விஷால் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அதை வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. இந்த வெற்றி, விஷாலின் உழைப்புக்கு சமர்ப்பணம். ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்கு வருத்தம்

கமர்ஷியல் படங்கள் பெரிய வெற்றி அடையும். அவற்றை ரசிகர்கள் ரசிப்பார்கள். கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வருவார்கள். என்னதான் கமர்ஷியல் படங்கள் என்ற டேக் என் மீது இருந்தாலும், முப்பது வருடங்களாக மக்கள் ஆதரவுடன் இதுவரை இருக்கிறேன்.

ஆனால், என் விஷயத்தில், மனதுக்குள் இன்னும் சின்ன வருத்தம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் படங்களையும் கொடுத்து வரும் என்னுடைய பெயர், நல்ல இயக்குநர் என்ற பட்டியலில் வராதது வருத்தம். இத்தனை ஹிட் கொடுத்தும் எனக்கான பெரிய பாராட்டுகள் இருக்காது. எனக்கு உரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படாமல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதுதான் எனது கொள்கை" என்றார்.

 

மதகஜராஜா படம்

காமெடி, ஆக்‌ஷன், கவர்ச்சி என அனைத்து கலந்த கலவையாக உருவாகியிருக்கும் மதகஜராஜா படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, வரலட்சுமி என இரண்டு பேர் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். சந்தானம் காமெடியனாக நடித்துள்ளார். சோனு சூட் வில்லனாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தங்களது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உயிரிழந்த பிரபலங்களான இயக்குநர் மனோபாலா, மணிவண்ணன் மற்றும் காமெடியில் கலக்கிய மயில்சாமி, சிட்டிபாபு, சீனுமோகன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் மூலம் விஷால் பின்னணி பாடகராகவும் உருவெடுத்துள்ளார். விஜய் ஆண்டனி இசையில் படத்தில் அவர் பாடிய டியர் லவ்வரு என்ற பாடல் அந்த காலகட்டத்திலேயே ட்ரெண்ட் ஆனது. தற்போது இந்த பாடல் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. அத்துடன் சந்தானத்தின் காமெடியும் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.