Singappenne: ஆனந்தியிடம் காதலை சொல்ல தயாரான அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: ஆனந்தியிடம் காதலை சொல்ல தயாரான அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ!

Singappenne: ஆனந்தியிடம் காதலை சொல்ல தயாரான அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ!

Aarthi Balaji HT Tamil
Aug 15, 2024 12:10 PM IST

Singappenne: மித்ராவை அழைத்து மகேஷ், “ நான் இன்னிக்கே ஆனந்தியின் அப்பா, அம்மாவை அழைத்து பெண் கொடுங்க என கேட்க போகிறேன் “ என சொன்னார்.

Singappenne: ஆனந்தியிடம் காதலை சொல்ல தயாரான அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ!
Singappenne: ஆனந்தியிடம் காதலை சொல்ல தயாரான அன்பு, மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ!

இன்றைய ப்ரோமோ

அதில், சுயம்புலிங்கம் அனைவரும் முன்பு வந்து நின்று கொண்டு, “ நான் ஆனந்திக்கு பரிசம் போட்ட முறை மாமன் “ என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்து பார்க்கிறார்கள்.

மித்ராவை அழைத்து மகேஷ், “ நான் இன்னிக்கே ஆனந்தியின் அப்பா, அம்மாவை அழைத்து பெண் கொடுங்க என கேட்க போகிறேன் “ என சொன்னார்.

மறுபக்கம் முத்து, அன்புவிடம், “ ஆனந்தியும் அவளின் குடும்பமும், அவளும் கஷ்டப்பட கூடாது என நினைத்தால் உடனே உன் காதலை ஆனந்தியிடம் சொல்லிவிட வேண்டும் “ என சொன்னார்.  அத்துடன் இன்றைய (ஆகஸ்ட் 15 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது. இருவரில் யார் காதல் முதலில் சொல்ல போகிறார்கள் என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்

அதில், “ ஊருக்கு சென்று இருக்கும் அனைவரும் வெளியே அமர்ந்து, பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது அழகப்பன், “ இந்த உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பெற்றவர்களை, பிள்ளைகள் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது தான். அது யாருக்குமே நடக்க கூடாது ” என அழுகிறார்.

உடனே, “ நாங்கள் இருக்கும் வரை நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் “ என சொல்கிறார் ஆனந்தி. அதை அவரின் மகன் கண்ணீர் மல்க ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருக்கிறார்.

அன்பு, “ இங்க வந்த பிறகு ஆனந்தியும், நீங்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என தெரிந்து கொண்டோம். இது எல்லாமே எங்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்கும் “ என்றார். ஆனந்தியின் குடும்ப நிலைமையை பார்த்து அனைவரும் என்ன இது என கஷ்டப்பட்டனர். இறுதியாக டிரைவர் அண்ணன் சாப்பிடுங்க என ஆசையாக ஆனந்தி, நாட்டு கோழி குழம்பை எடுத்து கொண்டு வருகிறார். ஆனால் அவர் பார்ப்பதற்குள் கிளினர் பையன் வந்து வாங்கி கொடுத்துவிட்டான். 

கர்ப்ப விஷயம்

இதற்கு இடையில் அனைவரும் திருட்டு தனமாக இளநீர் குடிக்க தோட்டத்தை சேர்ந்தவர் விரட்டினார். ஆனந்தி உட்பட அங்கிருந்து அனைவரும் ஓடி வர, ஆனந்தி மயக்கம் போட்டு அப்படியே சாய்வது போல் இருந்தார்.

இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரியவரும் என நினைத்தால் அவர் மறுத்துவிட்டார். வழக்கம் போல் இங்கு மருத்துவர் இருக்க மாட்டார், சென்னை வந்து பார்த்து கொள்கிறேன் என மழுப்பிவிட்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.