Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்;முற்றும் மும்முனை போட்டி;மித்ராவுடன் கைகோர்க்கும் சுயம்பு- சிங்கப்பெண்ணே சீரியல்!
Singapenne Serial: பரிசம் போட்ட பின்னர் சில கசப்பான சம்பவங்கள் நடந்து விட்டதால், அது அப்படியே நின்று விட்டது என்ற சுயம்பு, ஆனந்தி சென்னைக்கு சென்று கஷ்டப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் அங்கு சென்றதில் சற்று பக்குவப்பட்டு இருக்கிறாள் என்றும் பேசினான் - சிங்கப்பெண்ணே சீரியல்
Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்..முற்றும் மும்முனை போட்டி;மித்ராவுடன் கைகோர்க்கும் சுயம்பு! - சிங்கப்பெண்ணே சீரியல்
Singapenne Serial: ஊர் திருவிழாவில் கயிறு இழுக்கும் போட்டி நடைபெறும் நிலையில், எல்லோரும் கயிறு இழுக்கும் போட்டியில் சுயம்புலிங்கததை திறமையை மெச்சுகின்றனர். இதனையடுத்து அவர்களுடன் மகேஷ், அன்பு ஆகியோர் அடங்கிய குழு மோத தயார் ஆகிறது. அந்த போட்டியின் முடிவு என்ன? ஆனந்தியை கைப்பற்ற போவது யார் உள்ளிட்ட தொடர்பான நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெறும் என்று தெரிகிறது.
சுண்டிவிட்டு சுரண்டும் சுயம்பு
ஆனந்தியும் அவர்களது அலுவலகத்தில் உள்ளவர்களும் செவரக்கோட்டை கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தனர். அங்கு வந்திருந்த சுயம்புலிங்கம், அவர்களுக்கு பிரச்சினை கொடுக்க, குறுக்கே வந்த மகேஷ், ஏன் தேவையில்லாமல் பிரச்சினை கொடுக்கிறீர்கள் என்று சொல்லி கண்டிக்கிறான்..