Singapenne serial: கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி.. காதலை சொல்ல தயாரான அன்பு - பரபரப்புக்கு மத்தியில் சிங்கப்பெண்ணே சீரியல்!
Singapenne serial: தனக்கு நடக்கும் அனைத்து விஷயத்தையும் பார்த்து ஊருக்கு செல்கிறேன் என அழுத படி வார்டனிடம் சொல்கிறார் ஆனந்தி. அதற்கு அவர், “ போவதற்கு முன்பாக ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிட்டு போ” என சொல்கிறார்.
சிங்கப்பெண்ணே
கிராமத்தில் மகிழ்ச்சியாக, வெகுலியாக இருந்த பெண் ஆனந்தி. எதிர்பாராமல் அவரின் அண்ணன் பணத்தை எடுத்து கொண்டு காணாமல் போனதால் குடும்பமே பாதிக்கப்பட்டது.
குடும்ப கஷ்டத்தை போக்க சென்னை வருகிறாள் ஹீரோயின் ஆனந்தி. வழக்கம் போல் கிராமத்தில் இருந்து வேலைக்கு வரும் பெண் என்ன கஷ்டத்தை சந்திக்கிறாள் என்பதே கதை. ஆனந்தி வரும் கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே சிங்கப்பெண்ணே கதை. தினமும் சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய ப்ரோமோ
சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 1 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், “ தனக்கு நடக்கும் அனைத்து விஷயத்தையும் பார்த்து ஊருக்கு செல்கிறேன் என அழுத படி வார்டனிடம் சொல்கிறார் ஆனந்தி. அதற்கு அவர், “ போவதற்கு முன்பாக ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிட்டு போ” என சொல்கிறார்.
மறுபக்கம் முத்து, அன்புவிடம், “ ஆனந்தி பட்ட கஷ்டம் எல்லாமே போதும். நீ தான் அழகன் என்பதை அவளிடம் சொல்லி, கையை பிடித்து அழைத்து வா “ என சொல்கிறார். அன்புவிற்கு அந்த யோசனை சரி என தோன்றுகிறது.
ஆனந்தியிடம் உண்மையை சொல்ல போன அன்புவிடம், “ எனக்கு நடந்த சம்பவங்கள் பின்னால் யாருக்கு இருக்கிறார் என்று எனக்கு தெரிய வேண்டும் “ என உறுதியாக சொல்லிவிட்டார். காதலை சொல்ல போன அன்பு என்ன சொல்வது என தெரியாமல் நின்று கொண்டு இருப்பதுடன் இன்றைய ( ஆகஸ்ட் 1 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.
ஒரு பக்கம் அன்பு, ஆனந்தி ஒரே அறையில் இரவு முழுவதும் இருந்தது பிரச்னையாக இருக்கிறது. மறுபக்கம் ஆனந்தி கர்ப்பம் என்பது பெரிய பூகம்பம் வெடிப்பது போல் இருக்கிறது. பல்வேறு திருப்பங்கள் நிறைந்து இருக்கும் இந்த சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
நேற்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?
சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மயக்கம் அடைந்த ஆனந்தியை அவரின் அண்ணன் மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் தகவலை சொல்ல எப்போதும் போல் நண்பர்கள், அன்பு, மகேஷ் என அனைவரும் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் என்ன பிரச்னை என சொல்லாமல் எப்போது போல் அனைவரும் மாறி மாறி பேசி கொண்டே இருக்கிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி
தனக்கு எதுவும் இல்லை என சொல்லிவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேற விரும்புகிறார் ஆனந்தி. அனைவரும் வெளியே சென்றவுடன் மருத்துமனையில் பணி செய்யும் பெண், ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறார் என்ற விஷயத்தை யாரிடமாவது சொல்லி இருக்கலாம் என மருத்துவரிடம் கேட்கிறார். ஆனால் மருத்துவர் அதை சொல்ல தேவையில்லை என சொல்லிவிட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்