Singapenne Serial: உச்சக்கட்ட குழப்பம்.. ஆனந்தி கழுத்தை நீட்டப்போவது யாருக்கு? - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: உச்சக்கட்ட குழப்பம்.. ஆனந்தி கழுத்தை நீட்டப்போவது யாருக்கு? - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் இங்கே!

Singapenne Serial: உச்சக்கட்ட குழப்பம்.. ஆனந்தி கழுத்தை நீட்டப்போவது யாருக்கு? - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 01, 2025 11:22 AM IST

Singapenne Serial: ஆனந்தின் அப்பா மகேஷூக்கு ஆனந்தியை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்க, அவளோ அன்பை விரும்பி கிட்டத்தட்ட அவனது வீட்டின் மருமகளாகவே மாறிவிட்டாள். - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Singapenne Serial:  உச்சக்கட்ட குழப்பம்.. ஆனந்தி கழுத்தை நீட்டப்போவது யாருக்கு? - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் இங்கே!
Singapenne Serial: உச்சக்கட்ட குழப்பம்.. ஆனந்தி கழுத்தை நீட்டப்போவது யாருக்கு? - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் இங்கே!

இதற்கிடையே சுயம்புவும் ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்ள துடித்துக்கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஆனந்தி என்ன முடிவெடுக்கப்போகிறாள் என்ற ரீதியிலான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் ஹாஸ்டல் வார்டன் இருவரும் ஆனந்தியின் வீட்டிற்குச் சென்று அவளை பெண் கேட்டனர். ஆனந்தியின் அப்பாவும், அவர்களும் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சுயம்பு உள்ளே நுழைந்து விட்டான்.

குறுக்கே புகுந்த சுயம்பு

ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன் நான் மட்டும்தான்; அப்படி இருக்கையில் புதிதாக ஒருவன் வந்து பெண் கேட்பது சரி இல்லை என்ற ரீதியில் சுயம்பு விவாதம் செய்தான். இதைக் கேட்டு கடுப்பான மகேஷ், என்ன செய்வது என்று தெரியாமல் அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் சுயம்புவின் பேச்சை பொறுக்க முடியாத ஆனந்தியின் அம்மா, இவன் ஏன் இங்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறான். இவனை நீங்கள் வெளியே போக சொல்லுகிறீர்களா? இல்லை நான் வெளியே போக சொல்லட்டுமா என்று சாடினார்.

இதனையடுத்து உள்ளே இறங்கிய ஆனந்தியின் அப்பா, அவனை வெளியே போகச் சொல்லி விவாதம் செய்தார். அதற்கு சுயம்பு பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் கோபமான ஆனந்தியின் அப்பா, மகேஷ் தான் என்னுடைய மருமகன் என்று சொல்லிவிட்டார்.

குஷியான மகேஷ்

இதில் குஷியான மகேஷ், எப்போது என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்களோ அப்பொழுதே இது என்னுடைய குடும்பம் என்று சுயம்பிடம் மல்லுக்கட்டி நின்றான். இதைப் பார்த்த சுயம்பு அதிர்ச்சியில் உறைந்து நின்றான். இதையடுத்து அவனுக்கும் மகேஷுக்கும் விவாதம் நடக்க, மகேஷ் மிரட்டல் தொனியில் பேச ஆரம்பித்தான்.

இதில் கடுப்பான சுயம்பு வெளியே செல்ல, ஆனந்தியின் அப்பா தன்னுடைய மகளை சுயம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக தான் அப்படி சொன்னதாகவும், ஆனந்தியை கேட்காமல் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று மகேஷிடம் மாற்றிப்பேசினார். இதில் அதிர்ச்சியான மகேஷ், என்ன செய்வதென்று நின்றான்

மருமகளான ஆனந்தி

இன்னொருபக்கம் அன்பின் வீட்டில் விளக்கு ஏற்றிய ஆனந்தி, கிட்டத்தட்ட அவர்கள் வீட்டு மருமகளாகவே மாறிவிட்டாள். அன்பின் அம்மா அவளை ஏற்றுக்கொள்ள அவர்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தார்கள். இந்த நிலையில் ஆனந்தியின் அப்பா அவளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல முயன்றார். ஆனால் எதற்கும் நாம் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விஷயத்தை சொல்லாமல் விட்டு விட்டார். இந்த நிலையில் சுயம்பும், தீபிகாவும் இந்த விஷயத்தில் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி சண்டையிட்டுக்கொண்டனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.