Singapenne serial: மூடி திறந்த கதவு; அந்தரங்க கோலத்தில் கருணா! வெளுத்த ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!-sun tv singapenne serial nadagam latest today august 6 2024 episode promo here - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: மூடி திறந்த கதவு; அந்தரங்க கோலத்தில் கருணா! வெளுத்த ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne serial: மூடி திறந்த கதவு; அந்தரங்க கோலத்தில் கருணா! வெளுத்த ஆனந்தி! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 06, 2024 10:21 AM IST

Singapenne serial: கருணாவின் வேர்வை நாற்றத்தை தாங்க முடியாத மித்ரா அவரை திட்டினாள். தொடர்ந்து தன்னுடைய ஸ்பிரேயையும் அவன் மீது அடித்துவிட்டாள். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne serial: மூடி திறந்த கதவு; அந்தரங்க கோலத்தில் கருணா.. வெளு வெளுவென வெளுத்த ஆனந்தி.. விழி பிதுங்கிய மித்ரா!
Singapenne serial: மூடி திறந்த கதவு; அந்தரங்க கோலத்தில் கருணா.. வெளு வெளுவென வெளுத்த ஆனந்தி.. விழி பிதுங்கிய மித்ரா!

அதில், “சிங்கப்பெண்ணே சீரியலில், கருணாகரனையும் மித்ராவையும் அன்பும் ஆனந்தியும் திட்டமிட்டு லிப்டிற்குள் பூட்டி வைத்துவிட, அவர்கள் இரவு முழுக்க அதில் கிடந்து அவதிப்பட்டார்கள். இதையடுத்து காலையில் அவர்கள் வெளியே வந்த போது, கருணாகரன் வெறும் பனியனோடு இருந்தார். 

இதைப் பார்த்த பலரும் அவர்களை தவறாக நினைத்தார்கள். இதை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஆனந்தி, முன்பு தங்களை அவர்கள் அவமானப்படுத்தியது போல தற்போது இவள் அவர்களை இணைத்து வைத்து பேசி அவமானப்படுத்தினாள். மேலும் இதுபோல யாருக்கும் செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார். இதற்கிடையே கோயில் திருவிழாவுக்கு வரும் ஆனந்தியை மீண்டும் கம்பெனிக்கு அனுப்பக் கூடாது என்ற ரீதியில் ஒரு திட்டம் அரங்கேறுகிறது. ” இவை அதில் இடம் பெற்று இருக்கின்றன. 

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

சிங்க பெண்ணே சீரியலில் நேற்று ஆனந்தி கருணாகரனையும் மித்ராவையும் லிப்டிற்குள் பூட்டிவிட்டு சென்றுவிட, இருவரும் உள்ளே மாட்டிக் கொண்டார்கள். இந்த நிலையில், உள்ளே இருந்த கருணாகரன் மிகவும் வேர்க்கிறது என்று சட்டையை கழட்டிவிட்டார்.

கருணாவின் வேர்வை நாற்றத்தை தாங்க முடியாத மித்ரா அவரை திட்டினாள். தொடர்ந்து தன்னுடைய ஸ்பிரேயையும் அவன் மீது அடித்துவிட்டாள். இதற்கிடையே நான் தூங்க போகிறேன் என்று சொல்லிய கருணாகரன் லிப்டிற்குள் படுத்தே விட்டான். இதைப்பார்த்து அதிர்ந்து போன மித்ரா என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, இல்லை மேடம் மிகவும் வேர்க்கிறது. அதனால் நான் தூங்க செல்கிறேன் என்று சொல்லி ஒரு கட்டத்தில் குறட்டை விடவே ஆரம்பித்து விட்டார். இதை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் மித்ரா தவித்தாள்.

எச்சரித்த வார்டன்

இன்னொரு பக்கம் ஹாஸ்டல் வார்டன் மித்ராவின் நண்பர்களை, அவள் இன்னும் ஹாஸ்டலுக்கு வராதது குறித்து கேட்டு திட்டிக்கொண்டிருந்தார். இதை அவரது நண்பர்கள் அரவிந்துக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அரவிந்த் ஹாஸ்டல் வார்டனுக்கு போன் செய்து ஐஸ் வைப்பது போல பேசி, மித்ரா என்னுடன் தான் வந்திருக்கிறாள். விரைவில் கொண்டு விட்டு விடுகிறேன் என்று சொல்லி சமாளித்தான்.

ஆனால் அவரிடம் கடுமையாக பேசிய வார்டன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி சாடினார். இதற்கிடையே அரவிந்திடம் செக்யூரிட்டி மித்ராவின் கார் இங்கேதான் இருக்கிறது என்று சொல்ல, அலறி அடித்து வர லிப்ட் திறக்கப்பட்டது. கருணாகரன் அவிழ்ந்த சட்டையுடன் கிடந்தான். அவர்கள் இருவரையும் ஆனந்தி வெளுவெளுவென வெளுத்தாள். இதற்கிடையே அங்கு மகேஷ் வந்தான்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.