Marumagal Serial: ஆதிரையை அழ வைக்க 3 திட்டங்கள்.. சபதம் ஏற்கும் வேல்விழி.. கலக்கத்தில் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: உங்கள் நண்பனின் மகனுக்கு, ஆதிரையை கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் நிச்சயத்திற்கு வரவில்லை என்று முட்டுக்கட்டை போடுகிறாள். - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் ஆதிரைக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திடீரென்று குறுக்கே வந்து நிற்கும் மனோகரி, உங்கள் நண்பனின் மகனுக்கு, ஆதிரையை கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் நான் நிச்சயத்திற்கு வரவில்லை என்று முட்டுக்கட்டை போடுகிறாள். இந்தப்பக்கம் வேள்விழி பிரபுவிடம் நிச்சயத்தை நான் நடக்க விடமாட்டேன் என்கிறாள். இதை அவன் தில்லையிடம் சொல்ல, அவர் கலக்கம் அடைகிறார்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவப்பிரகாசம் மனோகரியால் இந்த நிச்சயதார்த்தத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று மனம் பதறுவதாக ஆதிரையிடம் கூறினார். அவரை ஆதரை சமாதானப்படுத்தி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறி அனுப்பி வைத்தாள்.
நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் சந்தோஷத்தில் இருந்த பிரபு ஆதிரையிடம் இரவு போனில் பேசிக் கொண்டிருந்தான். இதற்கிடையே பிரபு நிச்சயதார்த்த மோதிரத்தை பற்றி பேசி, நீ எடுத்துக்கொடுத்த மோதிரம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று வழிந்தான். இந்த நிலையில், உள்ளே வந்த அகல்யா, நீ அவ்வப்போது கதவை சாத்துகிறாயாமே என்ன கதை என்று கேட்டு கிண்டல் செய்கிறாள். இதையடுத்து ஆதிரை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அப்பா வந்தார் அவரிடம் பேசிவிட்டு கதவை சாத்தினேன் என்றாள்.
இச் இச் என்று சத்தம்
அதற்கு அகல்யா உள்ளே இருந்து அடிக்கடி இச் இச் என்று சத்தம் எல்லாம் வருகிறதே என்று கேட்க, பதறிய ஆதிரை நீ அடி வாங்கப் போகிறாய் என்று சொல்ல, அகல்யாவோ நீ அப்படியெல்லாம் சொல்லி தப்பிவிட முடியாது என்று ஒரேடியாக கிடுக்குப்பிடி போட்டாள்.
இந்த நிலையில், காலை நிச்சயதார்த்தத்திற்கு தேவையான எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன. இதற்கிடையே நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்காக மேகலை குடும்பம் மூன்று திட்டங்களை தீட்டுகிறது அதன்படி, மேகலையின் கணவர் தேவாவை அழைத்து அடியாட்களை வைத்து, இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்து என்று சொல்ல, அவன் முதலில் வீட்டிற்குள் குழப்பத்தை உண்டு பண்ணுங்கள். அதை வைத்து நான் உள்ளே புகுந்து அடித்து துவம்சம் செய்கிறேன் என்கிறான்.
வேள்விழியோ, என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள் எனக்கு இந்த நிச்சயதார்த்தம் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். இதற்கிடையே தில்லையும் இந்த நிச்சயதார்த்தத்தில் ஏதாவது நடக்குமோ என்று பயப்படுகிறான். இன்னொரு பக்கம் வேல்விழி பிரபுவுக்கு போன் செய்து நிச்சயதார்த்தத்துக்கு நாங்கள் வந்தால் பிரச்சினை வந்து, நிச்சயதார்த்தம் நின்றுவிடும் என்பதால்தான் நீ எங்களை அழைக்கவில்லை; நீ சரியான பயந்தாங்கோலி என்று சொல்ல, பிரபு உங்கள் சவகாசமே எங்களுக்கு வேண்டாம் என்பதற்காகத் தான் உங்களை நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கவில்லை என்று சொல்கிறான். இறுதியில் வேல்விழி உனது நிச்சயதார்த்தத்தை நான் நிறுத்திக் காண்பிக்கிறேன் என்று சவால் விடுகிறாள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்