Kayal Serial: சபதம் எடுத்த சீறிய கயல்.. சதி செய்யும் தீபிகா.. சகுனி வேலை செய்யும் தர்மா - கயல் சீரியலில் இன்று!-sun tv serial kayal nadagam latest today august 4 2024 episode promo - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: சபதம் எடுத்த சீறிய கயல்.. சதி செய்யும் தீபிகா.. சகுனி வேலை செய்யும் தர்மா - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: சபதம் எடுத்த சீறிய கயல்.. சதி செய்யும் தீபிகா.. சகுனி வேலை செய்யும் தர்மா - கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 05, 2024 08:17 AM IST

Kayal Serial: கயல் அவள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, அவளை எதிர்த்து நிற்கிறாள். மேலும், அடிக்க வந்த தீபிகாவின் கையையும் பிடித்து விட்டாள். - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: சபதம் எடுத்த கயல்.. சதி செய்யும் தீபிகா.. சகுனி வேலை செய்யும் தர்மா - கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: சபதம் எடுத்த கயல்.. சதி செய்யும் தீபிகா.. சகுனி வேலை செய்யும் தர்மா - கயல் சீரியலில் இன்று!

ஆனால், கயல் அவள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, அவளை எதிர்த்து நிற்கிறாள். மேலும், அடிக்க வந்த தீபிகாவின் கையையும் பிடித்து விட்டாள். இன்னொரு பக்கம், கயல் கல்யாணத்திற்கு ராஜலட்சுமியை அழைக்க காமாட்சி, தர்மலிங்கத்துடன் அவள் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு பிரச்சினை வெடிக்கிறது. இது தொடர்பான சம்பவங்கள் புரமோவில் இடம் பெற்று இருக்கின்றன.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

காமாட்சியிடம், தர்மலிங்கம் தன்னுடைய தங்கையிடமே கல்யாணத்திற்கான முதல் பத்திரிகையை வைத்து விடு என்று சொன்னதும், காமாட்சி தயங்கி நின்றாள். இதையடுத்து காமாட்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தர்மா, நிச்சயதார்த்தத்திற்கு எப்படி நீ பொறுமையாக நடந்து கொண்டு, அவளை வரவைத்தையோ, அதேபோல கல்யாணத்திற்கும் அவளை நீ வரவை என்று கூறினார். 

இதற்கிடையே வந்த மூர்த்தி, ஏற்கனவே கயல், ராஜலட்சுமி மகனை ஜெயிலுக்குள் வைத்ததில் அவர் கோபமாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் நாம் அவரை கல்யாணத்திற்கு அழைத்தால், பிரச்சினை பெரிதாகுமே என்று சொல்ல, இவரோ குடும்பம் என்றால் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். எழில் குடும்பத்தை பொறுத்த வரை, மிகப் பெரிய விஐபிகள் திருமணத்திற்கு வருவார்கள். அப்படி இருக்கும் பொழுது, அவர்களுக்கு சரிசமமாக நம்முடைய தரப்பில் இருந்தும் ஆட்கள் இருக்க வேண்டும். அதற்கு நான் ஒருவனாக இருந்தாலும் கூட, என்னை விட அதிக வசதி படைத்த ராஜலட்சுமி வருவதுதான் சரியாக இருக்கும். ஆகையால் தட்டு தாம்பலத்தோடு சென்று, ராஜலட்சுமியை கல்யாணத்திற்கு அழைப்பதற்கான வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டார். 

கயலிடம் விஷயத்தை சொல்ல வேண்டாம் என்ற தர்மலிங்கம் 

இந்த நிலையில் காமாட்சி, கயலிடம் ஒரு வார்த்தை சொல்லி விடலாமா என்று கேட்க, அவரோ எல்லாவற்றையும் நீ கயலிடம்  கேட்டு தான் செய்வாயா? வீட்டிற்கு பெரியவளாக நீயே ஒரு முடிவு எடுக்க மாட்டாயா என்று அதட்டினார். இதையடுத்து காமாட்சி வீட்டினர், ராஜலட்சுமி வீட்டிற்கு செல்வதற்கான வேலைகள் கவனிக்கின்றனர். 

இதற்கிடையே கயல், தனக்காக எழில் மாடியில் இருந்து குதித்ததை நினைத்து கலங்கி கொண்டிருந்தாள். இதையடுத்து அங்கு வரும் கீதா, என்ன ஆனது, ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்க, அவளோ எழிலை சந்தித்த விஷயத்தை பற்றி சொல்கிறாள். ஜோதிடத்தில் எழில் கயலை கல்யாணம் செய்து கொண்டால், அவன் இறந்து விடுவான் என்ற செய்தியை மனதிற்குள் வைத்து அவனை சந்தித்ததையும், அதன் பின்னர் நடந்ததையும் சொல்லி, தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்புகிறாள். 

இதையடுத்து கீதா ஏன் தைரியம் இல்லாத கயலாக இருக்கிறாய் என்று திட்ட, சுதாரித்துக்கொண்ட அவள், ஒரு கட்டத்தில் ஜாதகத்தை மீறிய சக்தி எங்களை காப்பாற்றும், நிச்சயமாக நான் எழிலை கரம் பிடித்தே தீருவேன். நிச்சயமாக இது நடக்கும். போராட்டம் என்பது இல்லாமல் இங்கு எதுவும் சாத்தியப்படாது. நான் எவ்வளவு தடைகள் வந்தாலும் ஊரறிய அவனது மனைவியாக சந்தோஷமாக வாழ்வேன். எழிலின் அம்மாவின் மனதில் மருமகளாக இடம் பிடிப்பேன் என்று சபதம் எடுக்கிறாள். இதற்கிடையே, தீபிகா இந்த கல்யாணத்தை தடுக்க சதி செய்து கொண்டிருக்க, எழில் மாடியில் இருந்து குதித்த விஷயத்தை அவளிடம் சொல்கிறான். இதில் அதிர்ந்து போகும் தீபிகா, நேராக கயலை வெளுக்க சென்றாள். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை இன்று பார்க்கலாம். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.