Jailer 2 BTS: கை டூப்பு! கால் டூப்பு! சொன்னவன்லாம் லைன்ல வா! வெளியானது ஜெயிலர் 2 அறிவிப்பு சூட்டிங் BTS!தலைவரு நிரந்தரம்
Jailer 2 BTS: அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 74 வயது ஆன போதிலும் இன்னும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 74 வயது ஆன போதிலும் இன்னும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்களுக்கு என தனி வரவேற்பு உண்டு. இவரது படங்கள் வெளியானலே ரசிகர்கள் ஒரு விழா போல கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் எடுக்கப்பட போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இப்படம் குறித்த அறிவிப்பு வீடியோவை எடுத்த BTS வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தலைவரு நிரந்தரம்
நடிகர் ரஜினி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். மேலும் இவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப் மற்றும் சுனில் உட்பட பலரும் நடித்திருந்தனர். மேலும் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றது. மேலும் இயக்குனர் நெல்சனின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு சிறந்த வெற்றி படமாகவும் அமைந்தது.
இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பு இயக்கியிருந்த பீஸ்ட் படத்தின் தோல்வியை இந்த ஜெயிலர் படம் சரி செய்து இருந்தது. இப்படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரஜினி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. தனது 74 வது வயதிலும் ரஜினி தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டார் நடிகராக ரஜினிகாந்த் 50 வருடங்களுக்கும் மேலாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அர்த்தமாயிந்தா ராஜா
ஜெயிலர் 2 படம் குறித்தான அறிவிப்பு வீடியோவில் அனிருத், நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த அறிவிப்பு வீடியோ வெளியானவுடன் பலர் சமூக வலைதளங்களில் ரஜினியின் கை மற்றும் கால் அவரது கிடையாது. டூப் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ள காட்சியாக இது உள்ளது என விமர்சித்து வந்தனர். இது ரஜினி ரசிகர்களை மிகவும் கடுப்பேற்றி இருந்தது.
இந்த நிலையில் இன்று சன் டிவியின் youtube தளத்தில் வெளியாகி உள்ள ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோவின் ஷூட்டிங் தளத்தில் நடைபெற்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. ரஜினியே இந்த ப்ரோமோ வீடியோவில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி எத்தனை வயதானாலும் மிகவும் சுறுசுறுப்புடன் அனைத்து காட்சிகளிலும் அவரே நடித்து வருகிறார் என்று பெருமையுடன் கூறி வருகின்றனர். இந்த வீடியோவில் நெல்சன், அனிரூத் மற்றும் ரஜினி ஆகியோர் ஒருவொருக்கொருவர் பேசி சந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர்.

டாபிக்ஸ்