Kayal serial: ‘நெஞ்சை பிடித்த வேதவள்ளி;காய் நகர்த்திய கயல்;சூன்யம் வைக்கும் லிங்கத்தின் மனைவி!- கயல் சீரியலில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: ‘நெஞ்சை பிடித்த வேதவள்ளி;காய் நகர்த்திய கயல்;சூன்யம் வைக்கும் லிங்கத்தின் மனைவி!- கயல் சீரியலில் இன்று!

Kayal serial: ‘நெஞ்சை பிடித்த வேதவள்ளி;காய் நகர்த்திய கயல்;சூன்யம் வைக்கும் லிங்கத்தின் மனைவி!- கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2024 12:01 PM IST

Kayal serial: தர்மலிங்கத்தின் மனைவி இந்த விஷயத்தை கயலுக்கு எதிராக கொண்டு செல்லும் வண்ணம் இந்த விஷயத்தை யார் செய்திருப்பார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்ற ரீதியில் வேதவள்ளியை நோக்கி பேசுகிறாள். - கயல் சீரியலில் இன்று!

Kayal serial: ‘நெஞ்சை பிடித்த வேதவள்ளி;காய் நகர்த்திய கயல்;சூன்யம் வைக்கும் லிங்கத்தின் மனைவி!- கயல் சீரியலில் இன்று!
Kayal serial: ‘நெஞ்சை பிடித்த வேதவள்ளி;காய் நகர்த்திய கயல்;சூன்யம் வைக்கும் லிங்கத்தின் மனைவி!- கயல் சீரியலில் இன்று!

இந்த நிலையில் அவன் ஆம்புலன்சை கொண்டு வந்தான். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேதவள்ளி மனது மாறி கயலின் அம்மாவிடம், உங்கள் மகள் என் உயிரைக்காப்பாற்றி விட்டாள் என்று கூறினார். 

தர்மலிங்கத்தின் மனைவி இந்த விஷயத்தை கயலுக்கு எதிராக கொண்டு செல்லும் வண்ணம் இந்த விஷயத்தை யார் செய்திருப்பார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்ற ரீதியில் வேதவள்ளியை நோக்கி பேசுகிறாள். இதையடுத்து அனைவரும் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய கயல் சீரியலின் பிரமோவில் இடம்பெற்று இருக்கிறது. 

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கயலுக்கு தேவி போன் செய்து, அத்தை உங்களை அவமானப்படுத்திய விஷயம் எனக்குத் தெரியாது. என்றும் ஏன் அதை என்னிடமிருந்து மறைத்தீர்கள் என்றும் ஆதங்கமாக கேட்டாள். அதற்கு கயல் மிகவும் பொறுமையாக, என்னுடைய கல்யாணத்திற்கு அத்தை வரவேண்டும் என்பது மட்டும்தான் இப்போது இருக்கும் என்னுடைய ஒரே குறிக்கோள்.

ஆகையால் அதற்காக நான் கொஞ்சம் இறங்கி போவதால் ஒன்றும் குறைந்து விட மாட்டேன். இப்போது நானும் அவர்களுக்கு சரி சமமாக இறங்கி சண்டை செய்தால் அவர்கள் எப்படி கல்யாணத்திற்கு வருவார்கள் என்றாள். இதையடுத்து பேசிய தேவி அன்பையும், ஷாலினியையும் இணைத்து வைத்து வேதவள்ளி பேசிக் கொண்டே இருக்கிறார். அன்பின் மீது உள்ள வெறுப்பில், நம்மையும் இவர்கள் வெறுக்கிறார்கள் என்றாள். இதையடுத்து அந்த பிரச்சினையை இன்றே தீர்க்கிறேன் என்று சொல்கிறாள் கயல்.

கொந்தளித்த வேதவள்ளி

இதையடுத்து கயல் அன்பை கூட்டிக்கொண்டு வேதவள்ளியின் வீட்டிற்கு வருகிறாள். அவர்களைப் பார்த்த உடனேயே கொந்தளித்த வேதவள்ளி உங்களுக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு சொரணை எல்லாம் கிடையாதா? என்னுடைய மகனின் கரு தேவியின் வயிற்றில் இருப்பதால்தான், நான் நீங்கள் கொண்டு வந்த பத்திரிக்கையை வாங்கிக் கொண்டேன்.

அப்படி இருக்கையில் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு வந்து நடிக்க வேண்டாம் என்று சாடுகிறாள். இதைய கேட்டும் பொறுமையாக பேசிய கயல், நான் உங்களிடம் நடிக்கவில்லை. நீங்கள் என்னுடைய கல்யாணத்திற்கு வர வேண்டும். அது என்னுடைய அம்மாவின் விருப்பம் ஆகையால் தயவுசெய்து பெரிய மனதுடன் கல்யாணத்திற்கு வாருங்கள் என்றாள்.

தொடர்ந்து பேசிய கயல், அன்பு மீது உங்களுக்கு என்ன கோபம் என்று கேட்க, பதில் சொன்ன வேதவள்ளி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும், அன்பு என்னுடைய மகளை காதலிக்கிறான். அத்துடன் கல்யாண வீட்டில் என் மகளுடன் அவன் கொஞ்சு குலாவிக்கொண்டிருந்தான் என்று கேவலமாக பேசுகிறார்.

மேலும், இவன் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை இவனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று சொல்ல, கோபப்பட்ட அன்பு வேதவள்ளியை நீ வா போ என்று பேச ஆரம்பித்து விட்டான். இதை கேட்டு மேலும் கோபப்பட்ட வேதவள்ளிக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது இதையடுத்து கயல், அன்பிடம் ஆம்புலன்சை கூட்டி வரச்சொன்னாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.