Kayal Serial: உச்சக்கட்ட பரபரப்பு.. கிடுக்குப்பிடியில் கயல்.. அதிர்ச்சியில் தர்மலிங்கம்.. கயல் சீரியலில் நடப்பது என்ன?
Kayal Serial: கயல் சீரியல் எப்படிப்பட்ட பரப்பரப்பான கட்டத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Kayal Serial: கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் கயலை விபச்சார வழக்கில் சிக்க வைத்த நிலையில், கயல் காவல் நிலையத்தில் காவலர்களிடம் தான் அந்த மாதிரியான பெண் கிடையாது என்று கெஞ்சி கேட்டு, தன்னை வெளியே விடும்படி புலம்பி கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த பெண் காவலர் மனதிற்குள் இன்ஸ்பெக்டர் இந்த சம்பவத்திற்காக ஏற்கனவே எழிலின் அம்மாவான வேதவள்ளியிடம் பணம் வாங்கி விட்டதாகவும், அந்த பணத்தில் தனக்கும் ஷேர் இருப்பதாகவும், அதனால் நீ என்ன கதறினாலும் உன்னை வெளியே விட மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே கயலின் போனை மூர்த்தி தொடர்பு கொண்டான். இதையடுத்து, தன்னுடைய போன் அடிக்கிறது என்று சொல்லி கயல் காவலர்களிடம் கூறிய போதும், பெண் காவலர் கயல் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதற்கிடையே வேறொரு விஷயத்திற்காக அங்கு வந்த நபர் ஒருவர் கயலை பார்த்து விடுகிறார்.
சிக்கிய கயல்
உடனே, இந்தப் பெண் எனக்குத் தெரியும் என்று கயலிடம் பேச போக, அந்தப் பெண் காவலரோ அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் கயலை வீடியோ எடுத்து தர்மலிங்கத்திற்கு அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து தர்மலிங்கத்திற்கு போன் செய்து விஷயத்தை கூறுகிறார். அதைக் கேட்ட தர்மலிங்கம் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். கூடவே, வடிவிருந்ததால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், காவல் நிலையத்திற்கு செல்வதற்கு தயாராகி, வடிவை வீட்டுக்குச் செல்லும்படி கூறினார். ஆனால், அவளோ செல்வது போல தெரியவில்லை.
இன்னொரு பக்கம் தமிழ் மன்றத்திலிருந்து கயலுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று வந்தவர்களை கயல் குடும்பத்தினர் நன்றாக கவனித்துக் கொண்டிருந்தனர். கயலுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை என்றதும் அவரது தோழியை அழைத்து, அங்கு கயலை தொடர்பு கொள்ள உதவுமாறு மூர்த்தி கூறினான்.
மற்றொரு பக்கம் யாரும் எதிர்பார்க்க விதமாக ரவுடிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையில் எழிலும் கயல் இருக்கும் அதே காவல் நிலையத்திற்கு வந்தடைந்து விட்டார். அதன் பின்னர் என்ன ஆனது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். அதற்கான புரொமோ சிறிது நேரத்தில் அப்டேட் செய்யப்படும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்