Kayal Serial: ‘விபச்சார வழக்கில் திண்டாடும் கயல்.. சிக்கலில் எழில்..’ - கயல் சீரியல் புரொமோ சொல்வதென்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: ‘விபச்சார வழக்கில் திண்டாடும் கயல்.. சிக்கலில் எழில்..’ - கயல் சீரியல் புரொமோ சொல்வதென்ன?

Kayal Serial: ‘விபச்சார வழக்கில் திண்டாடும் கயல்.. சிக்கலில் எழில்..’ - கயல் சீரியல் புரொமோ சொல்வதென்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 03, 2025 12:37 PM IST

Kayal Serial: கயல் சீரியலில் இன்று நடக்கும் நிகழ்வுகள் குறித்தான புரொமோ வெளியாகி இருக்கிறது. அத்துடன் கடந்த எபிசோடில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.

Kayal Serial:  ‘விபச்சார வழக்கில் திண்டாடும் கயல்.. சிக்கலில் எழில்..’ - கயல் சீரியல் புரொமோ சொல்வதென்ன?
Kayal Serial: ‘விபச்சார வழக்கில் திண்டாடும் கயல்.. சிக்கலில் எழில்..’ - கயல் சீரியல் புரொமோ சொல்வதென்ன?

அதில், ஏற்கனவே விபச்சார வழக்கில் தவறுதலாக சிக்க வைக்கப்பட்ட கயல் காவல் நிலையத்தில் அவதிப்பட்டு கொண்டிருந்தாள். இதற்கிடையே தற்போது புதிதாக அதே காவல் நிலையத்தில் எழிலும் ஒரு புகாரில் சிக்கி வந்து நிற்கிறான். கயல் ஒரு பக்கம் இந்த விஷயம் நம் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று தவித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவள் எழிலை பார்ப்பது போல காட்சி நிறைவடைகிறது.

எழிலை பார்த்த பின் அவள் என்ன செய்வாள்? எழில் என்ன குற்றத்தில் சிக்க வைக்கப்பட்டான் உள்ளிட்ட விவரங்கள் இன்றைய எபிசோடில் இடம்பெற இருக்கின்றன.

கடந்த எபிசோடில், ஒரு பெண் மூலமாக கயலை திட்டமிட்டு வீட்டிற்கு வர வைத்த கௌதம், அவளை விபச்சாரி போன்று போலீசில் சிக்க வைத்தான். அதற்கான ஏற்பாட்டை ஏற்கனவே வேதவள்ளி செய்திருந்தாள். போலீசும் அவரிடம் பணம் வாங்கி இருந்த காரணத்தால், அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கௌதமை தப்பி ஓட செய்து கயலை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

கதறிய கயல்

கயல் எவ்வளவோ சொல்லியும், அங்கிருந்த காவலர்கள் கேட்கவில்லை; குறிப்பாக அங்கிருந்த பெண் காவலர் கயலை அமைதியாக இருக்கும்படி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கயல் கேட்ட பாடு இல்லை; ஒரு கட்டத்தில் கோபமான அந்த பெண் காவலர் கயிலை அடிக்கவும் செய்தார்.

இதற்கிடையே அங்கிருந்த இன்னொரு காவலர் அந்தப் பெண் தப்பு செய்திருந்தால் இவ்வளவு கதற மாட்டாள். அவளது போனை வாங்கி, அவளது வீட்டில் இருந்து ஆட்களை வர வைக்கலாம் என்று அந்தப் பெண் காவலருக்கு சொல்ல, அந்தப் பெண் காவலரும் இன்ஸ்பெக்டருடன் கூட்டு சேர்ந்து, உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள் என்று அந்த காவலரை திட்டி அனுப்பிவிட்டார்.

கயலுக்கு விருது

இதற்கிடையே கயலின் வீட்டிற்கு வந்த தமிழ் மன்ற அமைப்பினர், கயலுக்கு சிறந்த சேவை மற்றும் வீரமங்கைக்கான விருதை வழங்க இருப்பதாக கூறுகின்றனர். இதைக் கேட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர். தொடர்ந்து தமிழ் மன்றத்தினர் கயிலை வரச் சொல்லுங்கள் என்று சொல்ல, கயல் வேலைக்குச் சென்று இருக்கிறாள்; விரைவில் வந்துவிடுவாள் நீங்கள் அமருங்கள் என்று குடும்பத்தினர் அவர்களை உட்கார வைக்கின்றனர்.

தமிழ் மன்றத்தினருடம் மீடியாவும் வந்திருந்தது. இதனால் கயலை மீடியாவில் நல்ல பெண்ணாக காட்டுவதற்கு குடும்பத்தினர் தயாராக இருந்தனர். ஆனால், அங்கு கயல் போலீஸ் நிலையத்தில் அவதிப்பட்டு கொண்டிருந்தாள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.