Kayal Serial: ‘வேதவள்ளி விரித்த வலை.. கனகச்சிதமாக முடித்த கெளதம்.. விபச்சார வழக்கில் கயல்’ - கயல் சீரியல் அப்டேட்
Kayal Serial: கயல் போலீசின் பிடியில் சிக்கிக்கொண்டாள். இப்போது அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாள்.’ - கயல் சீரியல் அப்டேட்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலின் அடுத்த எபிசோடுக்கான புரொமோ வெளியாகி இருக்கிறது.
கயலை அவமானப்படுத்த சதி
அந்தப் புரொமோவில், ‘கயலை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக வேதவள்ளி போட்ட திட்டத்திற்கு, அவள் இறையாகி விட்டாள். அதற்கு உறுதுணையாக இருந்த கௌதம் போலீசில் வேண்டுமென்றே சிக்கிக் கொண்டு, கயலை அவமானப்படுத்தும் வேலையை கனக்கச்சிதமாக முடித்துவிட்டான்.
இதனால் கயல் போலீசின் பிடியில் சிக்கிக்கொண்டாள். இப்போது அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாள்.’ இது தொடர்பான நிகழ்வுகள் அடங்கியிருக்கின்றன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
எழில் நண்பன் ஏற்பாடு செய்த வேலை பற்றி அறிவதற்காக பெங்களூர் கிளம்பினான். இதற்கிடையே உள்ளே வந்த மூர்த்தி, நீங்கள் இதுவரை பிசினஸ்மேனாகத்தான் இருந்தீர்கள்; இனிவரும் காலங்களிலும் நீங்கள் அதையே தொடருங்கள். வேலைக்கெல்லாம் செல்ல வேண்டாம் என்று கூறினான்.
ஆனால் எழிலோ, முதலாளியோ தொழிலாளியோ வேலை செய்ய வேண்டும். உழைப்பு தான் இங்கு மூலதனம் என்று கூறி, அவனை சமாதானப்படுத்தி கயலுடன் விமான நிலையத்திற்கு சென்றான். கயல் அவனை அங்கு விட்டுவிட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது, அவளுக்கு ஒரு பெண்ணிடமிருந்து ஃபோன் வந்தது.
கௌதமின் திட்டம்
அந்த போனில் அந்த பெண் தன்னுடைய கணவருக்கு வலிப்பு வந்து விட்டதாகவும், சீக்கிரமாக நீங்கள் வந்து அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் பதற்றத்துடன் பேசினார். முதலில் அதனை சந்தேகக் கண்ணோடு பார்த்த கயல், கொஞ்சம் யோசித்து பரிதாபப்பட்டு போன் செய்த பெண்ணின் வீட்டிற்கு சென்றாள். அங்கு சென்று பார்த்த பொழுது அது அனைத்தும் கௌதமின் திட்டம் என்பது தெரிய வந்தது;
கௌதமை பார்த்த கயல் கொந்தளிக்க அவனோ நான் உன்னை இங்கு வரவழைத்ததற்கான திட்டமே வேறு என்று சொல்லி, அவளை நெருங்கினான். இதையடுத்து கிட்ட வராதே என்று எச்சரித்த கயல், ஏற்கனவே எழிலிடம் வாங்கிய அடி உனக்கு போதவில்லையா? இந்த விஷயம் மட்டும் அவனுக்கு தெரிந்தால், உன்னை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவான் என்று கூறினாள்.
அதை மிகவும் அலட்சியமாக கேட்ட கௌதம், ஏற்கனவே நான் அவனிடம் அடி வாங்கி இருக்கிறேன். உன்னால் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறேன். இதன் காரணமாக என்னுடைய மனைவி என்னை விட்டுச் சென்று விட்டாள். இதற்கெல்லாம் சேர்த்து உன்னை பழி வாங்கிய ஆக வேண்டும் என்று வன்மத்தோடு பேசினான்.
சுண்டுவிரல் கூட உன் மீது படாது
கெளதம் தன்னிடம் தவறாக நடந்து கொள்வானோ என்றுகயல் சந்தேகம் கொள்ள, அவனோ என்னுடைய சுண்டுவிரல் கூட உன் மீது படாது என்று கூறி அடுத்தடுத்து தன்னுடைய திட்டத்தை அவிழ்த்தான்.
இதற்கிடையே, வேதவள்ளி புதிதாக வந்திருக்கும் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, உங்களுடைய கண்ட்ரோலில் இருக்கும் பாரதிநகரில் விபச்சாரம் நடக்கிறது என்றும் கயல் அங்கு இருக்கும் விஷயத்தை சொல்லியும், அவளை நீங்கள் கைது செய்ய வேண்டும் என்றும் கூறினாள். இறுதியில் இது வேதவள்ளியும், கெளதமும் இணைந்து போட்ட திட்டம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வேதவள்ளி சொன்ன வேலையை செய்ய ஆணையிட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்