Kayal Serial: ‘வளைகாப்பிற்கு கிளம்பிய விக்னேஷ்.. கடுகடுக்கும் வேதவள்ளி.. பரபரக்கும் கயல் வீடு! - கயல் சீரியல் அப்டேட்
Kayal Serial: விக்னேஷ் வளைகாப்பிற்கு வருவானா வரமாட்டானா என்ற தவிப்பில் தேவி துடித்துக் கொண்டிருந்தாள். மற்றொரு பக்கம், கயல் மற்றும் எழில் உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, அவர்களும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்னும் வரவில்லையா? என்று கேட்கத்தொடங்கிவிட்டனர். - கயல் சீரியல் அப்டேட்!

Kayal Serial: தேவியின் வளைகாப்பிற்கு விக்னேஷ் புறப்பட்டு கொண்டிருந்த நிலையில், வேதவல்லி அவனது பின்னால் நின்று கொண்டு, தேவி மற்றும் கயல் குடும்பத்தினர் இவனை மூளைச்சலவை செய்து விட்டார்களே என்று புலம்பி கொண்டு இருந்தாள்.
இந்தப் பக்கம் கயல், விக்னேஷ் தேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர் நமக்காக வரவில்லை என்றாலும் காதலுக்கு மரியாதை கொடுத்து நிச்சயமாக வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இதற்கிடையே அன்பு அவரது மனைவியிடம் இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்க, அவளோ இதற்கு ஒரு வழி இருக்கிறது என்று கூறுகிறாள். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாலினி, வேதவள்ளியிடம் அன்பு குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் பேசியதை குறிப்பிட்டு பேசிகயல் பூரித்துக்கொண்டிருந்தாள். அதற்கு ஷாலினி, அதற்கான முக்கிய காரணம் நீங்கள்தான் என்று கூறியதோடு, உங்களை போல இருக்க வேண்டும் என்று நினைத்துதான் நான் அப்படி இருந்தேன் என்று நெகிழ்ந்தாள். அதற்கு கயல் அப்படியெல்லாம் இல்லை. உனக்கு இயல்பாகவே நல்ல புரிதல் இருக்கிறது என்றாள்.
காமாட்சியை சீண்டிய அன்பு
இதற்கிடையே அன்பு, காமாட்சி ஷாலினிடம் பேசாததை குறிப்பிட்டு பேசினான். இதைக்கேட்டு காமாட்சி அமைதியாக செல்ல, எல்லோரும் அவனை கண்டித்தனர். இன்னொரு பக்கம் வேதவள்ளியின் வீட்டில் விக்னேஷ் வளைகாப்பிற்கு கிளம்பி கொண்டிருக்க, வேதவள்ளி கடுகடுவன நின்று கொண்டிருந்தாள்.
வடிவு போட்ட திட்டம்
இந்தப்பக்கம் விக்னேஷ் வளைகாப்பிற்கு வருவானா வரமாட்டானா என்ற தவிப்பில் தேவி துடித்துக் கொண்டிருந்தாள். மற்றொரு பக்கம், கயல் மற்றும் எழில் உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, அவர்களும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்னும் வரவில்லையா? என்று கேட்கத்தொடங்கிவிட்டனர். இதையடுத்து எழில் இந்த விஷயத்தை கயலிடம் சொல்ல, அவளோ விக்னேஷ் நிச்சயமாக வருவார் என்று நம்பிக்கை கூறினாள்.
இதற்கிடையே,வடிவு இந்த வளைகாப்பில் பிரச்சினை ஏற்பட வேண்டும் என்று பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். இதற்கிடையே மகாலிங்கம் அவளை மிரட்டி அங்கிருந்து செல்ல வைத்தான். இந்த நிலையில்தான் கயல் கல்யாணத்தில் பிரச்சினை செய்த கோமதி கணவருடன் வந்தாள். அவளைப்பார்த்த வடிவு நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறி, விக்னேஷ் கிளம்புகிறானா இல்லையா என்பதை தெரிந்து வரச்சொன்னாள்.
நண்பன் கொடுக்கும் குடைச்சல்
அதற்கு அவள் நான் எப்படி ட இதை செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டிருந்தாள். இதற்கிடையே யாரும் எதிர்பாராத விதமாக, கயலின் நண்பன் அங்கு வர, அவளை லெஃப்ட் ரைட் வாங்கினார் கோமதி. அத்தோடு கயல் எபிசோட் முடிவடைந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்