Kayal Serial: ‘சத்தியமா கல்யாணம் நடக்காது.. ’ - எழில் முகத்திற்கு நேராக சொல்லிய கயல் - இன்றைய ப்ரோமோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: ‘சத்தியமா கல்யாணம் நடக்காது.. ’ - எழில் முகத்திற்கு நேராக சொல்லிய கயல் - இன்றைய ப்ரோமோ

Kayal Serial: ‘சத்தியமா கல்யாணம் நடக்காது.. ’ - எழில் முகத்திற்கு நேராக சொல்லிய கயல் - இன்றைய ப்ரோமோ

Aarthi Balaji HT Tamil
Aug 01, 2024 10:07 AM IST

Kayal Serial: ஜாதகம் சரியாக இல்லாத ஒரே காரணத்திற்காக எழிலை விட்டு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பிரிய நினைக்கிறார் கயல். ஆனால் இது எதுவுமே தெரியாமல் எப்போதும் போல் கயல்.. கயல் என நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எழில்.

‘சத்தியமா கல்யாணம் நடக்காது.. ’ - எழில் முகத்திற்கு நேராக சொல்லிய கயல் - இன்றைய ப்ரோமோ
‘சத்தியமா கல்யாணம் நடக்காது.. ’ - எழில் முகத்திற்கு நேராக சொல்லிய கயல் - இன்றைய ப்ரோமோ

முதலில் டி. ஆர். பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த கயல் தற்போது இரண்டாவது இடத்திற்கு நகர்ந்து சென்று இருக்கிறது.

கயல்

பிரபல தொலைக்காட்சி நடிகையான சைத்ரா ரெட்டி, கயல் என்ற பாத்திரத்தில் தலைப்பு கேரக்டரில் நடித்து உள்ளார். இது அந்தக் கதாபாத்திரம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி போராடுகிறார் என்பதைச் சுற்றி வருகிறது. அவர் குடும்பத்தின் ஒரே நபராக சம்பாதிப்பவர். ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் கயலின் அமைதியான காதலனாக எழில் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜாதகம் சரியாக இல்லாத ஒரே காரணத்திற்காக எழிலை விட்டு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் பிரிய நினைக்கிறார் கயல். ஆனால் இது எதுவுமே தெரியாமல் எப்போதும் போல் கயல்.. கயல் என நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எழில். மறுபக்கம் எப்படியாவது எழிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையான எண்ணத்தில் இருக்கிறர் தீபிகா. 

இதனிடையே கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 1 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், கயல் தனது தோழியிடம் பேசி கொண்டு இருக்கிறார். 

எழிலுக்கு எப்படி இருக்கும்

" இப்போ காதலித்த உன்னாலேயே எழிலை விட்டு கொடுக்க முடியவில்லை என்றால், முன்பில் இருந்து காதலித்து வரும் எழிலுக்கு எப்படி இருக்கும் " என தோழி கேட்கிறார். பதில் சொல்ல முடியாமல் திணறிய படி நின்று கொண்டு இருக்கிறார்.

மறுபக்கம் தீபிகா, சிவசங்கரிக்கு போன் செய்து, ஆனந்தி எடுத்த போட்டோ அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் அழித்துவிட்டார், இதற்கு பின்னால் கயல் தான் இருக்கிறார் என தனக்கு தோன்றுவதை அப்படியே பேசிவிட்டார்.

உண்மையை சொல்லிய கயல்

ஜாதகம் பொருத்தம் கயல், எழிலுக்கு சரியாக இல்லாத காரணத்தினால் புது குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இத்தனை நாட்களாக எப்படி எழிலிடம் திருமணம் வேண்டாம் என சொல்வது என யோசித்து தவித்த கயல், ஒரு வழியாக இன்று சொல்லிவிடுகிறார். 

சத்தியமா கல்யாணம் நடக்காது

அவர் கயலை சந்தித்து, " ஒரு வேலை நான் உன்னை விட்டு போனால், என்ன பண்ணுவ " என கேட்கிறார். உடனே எழில், " விளையாட்டிற்கு கூட அப்படி சொல்லாதே கயல் " என்றார். உடனே கயல், " உனக்கும், எனக்கும் சத்தியமா கல்யாணம் நடக்காது " என சொல்வதுடன் ப்ரோமோ முடிந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.