Kayal: என்ன ஆச்சு.. கயல் எடுத்த அதிரடி.. தவறான முடிவு எடுத்த எழில் - பரபரப்பான ப்ரோமோ
Kayal: இறுதியாக தன் முடிவில் உறுதியாக இருக்கும் கயல், “ நான் இல்லை என்றாலும் உன்னால் வாழ முடியும் “ என அழுத்தமாக சொல்கிறார். வார்த்தைக்கு கூட அதை ஏற்க முடியாத எழில் எப்படி இதை பார்த்து கொண்டு சும்மா இருப்பார்.
Kayal: கயல் சீரியலில் நேற்று ( ஆகஸ்ட் 1 ) தன் தோழியை அழைத்து, எழிலிடம் உண்மையை சொல்ல போவதாக கூறினார். " இப்போ காதலித்த உன்னாலேயே எழிலை விட்டு கொடுக்க முடியவில்லை என்றால், முன்பில் இருந்து காதலித்து வரும் எழிலுக்கு எப்படி இருக்கும் " என தோழி கேட்கிறார். பதில் சொல்ல முடியாமல் திணறிய படி நின்று கொண்டு இருக்கிறார்.
வெளிவந்த உண்மை
பல நாட்களாக உண்மையை மறைத்து வைத்து இருந்த நிலையில் இறுதியாக எழிலிடம் அனைத்தையும் சொல்லிவிடலாம் என நினைக்கிறார் கயல். இதற்காக அவரை சந்திக்க வேண்டும் என போன் செய்து சொல்ல, ஆசையாக காதலியை பார்க்க செல்கிறார் எழில்.
சத்தியமா கல்யாணம் நடக்காது
எழிலை சந்தித்த கயல், " ஒரு வேலை நான் உன்னை விட்டு போனால், என்ன பண்ணுவ " என கேட்கிறார். உடனே எழில், " விளையாட்டிற்கு கூட அப்படி சொல்லாதே கயல் " என்றார். உடனே கயல், " உனக்கும், எனக்கும் சத்தியமா கல்யாணம் நடக்காது " என சொல்கிறார். விளையாட்டிற்கு கூட இதை கேட்க விரும்பாத எழில், கயல் மீது கடுமையாக கோபம் அடைந்தார்.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 2 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், " கயல் இனிமேல் உன் வாழ்க்கையில் இல்லை “ என சொல்ல கடுப்பான எழில், “ என்ன நடந்தாலும் நான் உன் வாழ்க்கையை விட்டு போக மாட்டேன் “ என்றார்.
உன்னால் வாழ முடியும்
இறுதியாக தன் முடிவில் உறுதியாக இருக்கும் கயல், “ நான் இல்லை என்றாலும் உன்னால் வாழ முடியும் “ என அழுத்தமாக சொல்கிறார். வார்த்தைக்கு கூட அதை ஏற்க முடியாத எழில் எப்படி இதை பார்த்து கொண்டு சும்மா இருப்பார்.
எழில் எடுத்த அதிரடி முடிவு
தன் காதலை எப்படியாவது புரிய வைக்க வேண்டும் என்று, “ நீ இல்லாமல் வாழ முடியாது.. பார்க்கிறாயா.. “ என சொல்லி கொண்டு அவசரமாக அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதிப்பது போல் ப்ரோமோ முடிந்தது.
ரசிகர் கமெண்ட்
இதை பார்த்த ரசிகர் ஒருவர், “ கயலுக்கு எப்ப பாரு இதான் வேல அப்படி சொன்ன எந்த மனுஷனும் டார்ச்சர் தாங்க முடியாத மாடியிலிருந்து குதுச்சிடுவான் “ என கமெண்ட் செய்து உள்ளார். ஒரு சிலரோ வழக்கம் போது இது கனவாக இருக்கும், கயல் உண்மையில் இது போன்று எழிலிடம் சொல்ல வாய்ப்பு இல்லை என கமெண்ட் அடித்து இருக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்