தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sun Tv Ethirneechal Serial Today Episode Promo

Ethirneechal: காணமால் போன சித்து.. பதறும் உமையாள்… பதற்றத்தில் ஈஸ்வரி…எகிறும் எதிர்நீச்சல் சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 01, 2024 02:01 PM IST

இன்னொரு பக்கம் நந்தினி, கதிர் எங்கேயோ சென்று வீட்டுக்கு வர, அவரிடம் எங்கே போனீர்கள் என்று சொல்லி கேட்கிறாள். கதிரும் என்னவெல்லாமோ சொல்லி சமாளித்தான். ஆனால், நந்தினி கேட்ட பாடில்லை.

எதிர்நீச்சல் புரமோ!
எதிர்நீச்சல் புரமோ!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் ஹைலைட்டாக இருந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இதனையடுத்து அவருக்கு பதிலாக எழுத்தாளரும், நடிகருமான வேலராம மூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

நேற்றைய எபிசோடில் போலீஸ் கைது செய்ய வருவதாக கூறி அஞ்சனா போனில் வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தாள். இதனை ஜனனியும், ஆதியும் பார்த்து விட இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு பைக்கில் விரைகின்றனர்.

அங்கு சென்று தாய் பார்வதியையும், தங்கை அஞ்சனாவையும் குறித்து கேட்க, அது போல் யாரையும் நாங்கள் கைது செய்ய வில்லை என்று போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதையடுத்து ஆதி இல்லை சார்... இங்கேதான் அழைத்து வந்து இருக்கிறார்கள் என்று அழுத்தி கேட்க, போலீஸ் தரப்பு கைது செய்து விசாரணைக்காக வேறு எங்காவது கூட அழைத்துச் சென்று இருக்கலாம் என்று கூறுகிறது.

இன்னொரு பக்கம் நந்தினி, கதிர் எங்கேயோ சென்று வீட்டுக்கு வர, அவரிடம் எங்கே போனீர்கள் என்று சொல்லி கேட்கிறாள். கதிரும் என்னவெல்லாமோ சொல்லி சமாளித்தான். ஆனால், நந்தினி கேட்ட பாடில்லை. இறுதியாக நீங்கள் திருந்தி விட்டீர்கள் என்று நினைத்துதான் தற்போது நிம்மதியாக இருக்கிறேன். ஆனால் மறுபடியும் அண்ணனோட இணைந்து வேறு ஏதாவது செய்தீர்கள் என்றால் நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கிறாள்.

அப்படியே கட் செய்தால், இந்தப்பக்கம் ஜனனியும், சக்தியும் காத்திருந்து, காத்திருந்து பார்த்து விட்டு… ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், போலீசிடம் சென்று கேட்க, அவரோ உங்கள் மாமியார் வசிக்கும் தெரு எங்களது லிமிட்டில் வராது என்றும் அது வேறு காவல்நிலைய லிமிட்டில் வரும் என்று அசால்ட்டாக கூறுகிறார்.

இன்னொரு பக்கம் சித்தார்த் காணாமல் போக, உமையாள் ராமை வீட்டுக்கு வரச்சொல்லி, வெளியே நிற்குமாறு கூறுகிறாள். இது குறித்த விஷயத்தில் அவர் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, மொத்தக்குடும்பமும் என்னாச்சு இவளுக்கு என்ற ரீதியில் வேடிக்கை பார்க்கிறது. 

இதற்கிடையே வந்த குணசேகரன் சித்தார்த் எங்கே என்று கேட்க, உமையாள் நண்பர்களை பார்க்க வெளியே சென்று இருக்கிறான் என்று சொல்லி சமாளிக்கிறாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் கதிர், தன்னுடைய திட்டம் நிறைவேறியது போல சந்தோஷப்படுகிறான்.

இந்த நிலையில், இன்று வெளியாகி இருக்கும் புரமோவில் உமையாள், ஜனனி சக்தி என இரண்டு பேருரையும் காணவில்லை. சித்துவை அவர்கள் பிளான் போட்டு கூட்டிச்சென்று விட்டார்களா என்று பார்க்க வேண்டும் என்று சொல்கிறாள். 

இன்னொரு பக்கம் மிகவும் பதற்றத்தோடு, ஈஸ்வரி தர்ஷினியிடம் ஜீவானந்ததிற்கு என்ன ஆனது என்று கேட்டுக்கொண்டிருக்கிறாள். மற்றொரு பக்கம், ஜனனியும் சக்தியும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சென்று விசாரிக்க, அவர்கள் கைது செய்ய வில்லை என்று கூறுகின்றனர். இந்த நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்