Ethirneechal: கன்னத்தில் விழுந்த அறை..ஆதி குணசேகரனுக்கு எதிராக திரும்பிய கதிர்..மருமகள்களை வெட்ட வந்த மாமியார்
Ethirneechal Promo: எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Ethirneechal Serial Today Promo: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.
அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்தது.
இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில், அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ( ஜனவரி 22) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் காவல் நிலையம் முன்பாக கரிகாலன் கன்னத்தில் கதிர் ஒரு அறை விழுந்தது. உடனே ஆதி குணசேகரன், நானும் அதே கருத்து சொல்கிறேன், என்னையும் அடிப்பாயா? என கேட்கிறார்.
இதனால் கதிருக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. தனது அண்ணன் ஆதி குணசேகரனை பார்த்து, ' ஒன்னு நீ திருந்து இல்ல என்ன திருந்த விடு ' என கோபத்துடன் கத்தினார் கதிர். என்னது நம்ம தம்பியா இது? நம்மை எப்படி எதிர்த்து பேசுகிறான்? என அதிர்ச்சியில் கதிரை பார்க்கிறார், ஆதி குணசேகரன்.
இதன் பின் வரும் காட்சியில் விசாலாட்சி தன் பெரிய மகன் ஆதி குணசேகரனிடம், இனிமேல் தங்கள் வீட்டில் இருக்கும் மருமகள்கள் யாரும் தேவையில்லை என கூறி, கையில் அரிவாளுடன் வந்து நிற்கிறார். வெளியே ஏகப்பட்ட நபர்கள் வந்து நிற்கிறார்கள்.
இவ்வளவு நாள் தன் அண்ணன் பேச்சு மட்டுமே கேட்டு அவர் பேச்சு மட்டுமே வேதவாக்கு என வாழ்ந்து வந்த தம்பி கதிர் தற்போது அண்ணன் ஆதி குணசேகரனுக்கு எதிராகவே மாறி இருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் கடைசியாக கதிருக்கு எல்லாம் புரிந்துவிட்டதே, இனியாவது நல்ல மனிஷனாக இவர் வாழ வேண்டும். இவரை போல் இரண்டாவது அண்ணனும் மாறினால் ஆதி குணசேகரன் ஆட்டம் அடங்கிவிடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மிகவும் பரபரப்பான ப்ரோமோ வெளியாகி இருப்பதால் இன்றைய நாளின் எபிசோட் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்