எல்லாரும் சேர்ந்து வர்றாங்க! அதே டைம்தான்! வெளியானது எதிர்நீச்சல் 2 சீரியல் புரோமோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எல்லாரும் சேர்ந்து வர்றாங்க! அதே டைம்தான்! வெளியானது எதிர்நீச்சல் 2 சீரியல் புரோமோ!

எல்லாரும் சேர்ந்து வர்றாங்க! அதே டைம்தான்! வெளியானது எதிர்நீச்சல் 2 சீரியல் புரோமோ!

Suguna Devi P HT Tamil
Dec 10, 2024 10:18 AM IST

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளை தாண்டி வீட்டில் உள்ள குழந்தைகளும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பார்க்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்காக அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் ஒரு சீரியலாக இருந்து வந்த சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல்.

எல்லாரும் சேர்ந்து வர்றாங்க! அதே டைம்தான்! வெளியானது எதிர்நீச்சல் 2 சீரியல் புரோமோ!
எல்லாரும் சேர்ந்து வர்றாங்க! அதே டைம்தான்! வெளியானது எதிர்நீச்சல் 2 சீரியல் புரோமோ!

மேலும் இந்த சீரியலில் நடித்த நடிகர் மாரிமுத்துவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக மாரிமுத்துவின் இறப்பிற்கு பின் அவர் நடித்திருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேலா ராமமூர்த்தி நடித்திருந்தார் இருப்பினும் மாரிமுத்துவிற்கு கிடைத்த அதே வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் நடிகை பிரியதர்ஷினி,கனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த நிலையில் இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முற்று பெற்றது. 

எதிர்நீச்சல் சீரியல் 2

எதிர்நீச்சல் சீரியல் முடிந்ததை பல ரசிகர்கள் கவலையாக கருதினர். ஒரு நாளின் சிறந்த பொழுது போக்காக இருந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுற்றதை பல இணையவாசிகளும் பதிவிட்டு வந்தனர். மேலும் இந்த சீரியல் 2 ஆம் பாகம் வரும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகியதில் இருந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த் சீரியலின் 2 ஆம் பாகத்திற்கான புரோமோ சன் டிவி யூட்யூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

ப்ரைம் டைம்மிற்கு பஞ்சாயத்து 

சன் டிவியில் நடிகை தேவையானி நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் சீரியலின் இயக்குனர் தான் திருச்செல்வம். இந்த கோலங்கள் சீரியல் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சீரியலில் ஒன்றாக இருந்தது. இதற்கு காரணம் கோலங்கள் சீரியலில் அபியாக நடித்திருந்த தேவயானி சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி எப்படி தொழிலில் வெற்றி அடைகிறார் என்பதை மையக்கருவாக வைத்து இந்த சீரியல் இருந்தது.

இந்நிலையில் இதனை தொடர்ந்து இயக்குனர் திருசெல்வம்  மாதவி, பொக்கிஷம் உட்பட பல சீரியல்களை இயக்கியிருந்தார். இருப்பினும் இந்த சீரியல்கள் எதுவும் அவருக்கு கோலங்கள் கொடுத்து அளவிற்கு புகழை பெற்று தரவில்லை.  கடந்த 2021 ஆண்டு முதல் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். இவர் வாழ்க்கையில் உண்மையாகவே சந்தித்த ஒரு ஆணாதிக்க கதாபாத்திரத்தை கருவாக வைத்தே சீரியலின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை உருவாகி இருந்ததாக பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.

 மேலும் இந்த சீரியலில் கனிகா,பிரியதர்ஷினி ஹரிப்பிரியா என பலர் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களது நகைச்சுவை கலந்த நடிப்பும் உணவுப்பூர்வமான காட்சிகளும் சீரியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தின. இருப்பினும் பல வருடங்களாக சன் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங் கொடுத்த எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் இறப்பிற்கு பின் சிறப்பாக செல்லவில்லை. 

இதன் காரணமாக சன் டிவி குழுமம் எதிர்நீச்சல் சீரியலின் நேரத்தை வேறு நேரத்தில் ஒளிபரப்ப திருமுருகனிடம் பேசி வந்தது. இருப்பினும் அவர் மறுத்துவிட்டு சீரியலையே திடீரென முடிவுக்கு கொண்டு வந்தார். இது பொதுமக்களிடையும் ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இந்நிலையில் முன்னதாகவே அவர் எதிர்நீச்சல் 2 எடுக்கப் போவதாக கூறியிருந்தார். தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.