Coolie Movie Update: லோகி பிறந்தநாளில் வெளியான வைப் மெட்டீரியல்.. என்னா ஸ்டைலு.. சூப்பர் ஸ்டாரை ரசிக்கும் மக்கள்..
Coolie Movie Update: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளான இன்று கூலி படப்பிடிப்பில் நடிகர்களுடன் லோகேஷ் கனகராஜ் எடுத்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது.

Coolie Movie Update: வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இறுதிகட்ட படப்பிடிப்பு
கூலி படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூலி படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக கூறினார். இவரது இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சினிமா நட்சத்திரங்களே விரும்பும் இயக்குவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர், இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நேற்று நள்ளிரவு லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்கள் படை சூழ கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
கூலி படப்பிடிப்பு புகைப்படம்
இந்த வீடியோக்கள் வெளியாகி வைரலான நிலையில், லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த், நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோருடன் இயக்கி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எடுத்த புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: கூலி படத்திற்கு அப்டேட் மேல் அப்டேன்.. குஷியில் ரசிகர்கள்
அந்தப் புகைப்படத்தில், மிகவும் மாஸான, கிளாஸான, ஸ்டைலான ரஜினியின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் எல்லாம் ஆர்பரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் வரும் ரஜினியின் லுக்கை பார்த்து பலரும் ரஜினியின் வயது குறைந்து மிக இளைமையாக உள்ளார் என கொண்டாடி வருகின்றனர். அத்தோடு, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படத்தில், நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜூடன் இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
முக்கிய முடிவெடுத்த லோகி
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் 10 படங்களோடு தன்னுடைய கெரியரை முடித்துக்கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசும் போது, “முன்பு இருந்தே நான் அந்த விஷயத்தை சொல்லிக்கொண்டுதான் இருந்தேன். ஒரு 10 படம் டைரக்ட் செய்து விட்டு, திரைத்துறையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குநராக வலம் வரும் குவெண்டின் டரான்டினோவை பார்த்துதான், நான் இந்த முடிவு எடுத்தேன்.
பெருமையாக செல்ல வேண்டும்
42, 43 வயதில் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு விட்டு சென்று விடலாம் என்று நினைக்கிறேன். கமிட் செய்த படங்களை முடித்து விட்டு, ட்விட்டரில் நான் திரைத்துறையை விட்டு விலகிக்கொள்கிறேன் என்று ட்வீட் செய்து விட்டு பெருமையாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
சீரியஸாக சொல்கிறேன்
தற்போது ரஜினிகாந்தின் கூலி படம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக நிச்சயமாக கைதி 2 படத்தை இயக்கப்போகிறேன். அதன் பின்னர் விக்ரம் 2, ரோலக்ஸ் இருக்கிறது. பிரபாஸூடன் படம் செய்வதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அத்துடன் ‘எண்ட் கேம்’ என்று போட்டு முடிவு எழுதி விட வேண்டியதுதான். நான் இந்த விஷயத்தில் மிகவும் சீரியஸாக இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
