ஜோடி சேருமா பாலிவுட் வாரிசுகள்? டேட்டிங்கில் இருக்கும் அமிதாப் பச்சன் பேரனும் ஷாருக்கான் மகளும்! ரசிகர் வெளியிட்ட வீடியோ
ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோர் டேட்டிங் செய்து வருவதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

சினிமா பிரபலங்களில் யாரேனும் திருமணம் செய்து கொண்டால் அது சுவாரசியமான ஒன்று தான். அது போல தான் இன்று வரை சூர்யா ஜோதிகா இணைக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது கூட விஜய் தேவரக்கொண்டா மற்றும் ராஸ்மிகா டேட்டிங் செய்வதாக பரவி வரும் செய்தி கூட ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இது இயல்பாகவே அடுத்தவர்களின் வாழ்க்கையை பற்றி அறிந்துக் கொள்ளும் சுவாரசிய உணர்வு தான். நமது வீட்டிற்கு அருகே உள்ள வீடு, உறவினர் வீடு என எங்காவது ஏதாவது நடந்தால் உடனே தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறது அல்லவா, அது போலத்தான் நட்சத்திரங்களின் வாழ்விலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது சிக்கியிருப்பது ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோர் ஆவர் ஜோயா அக்தரின் தி ஆர்ச்சீஸ் மூலம் ஒன்றாக தங்கள் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினர். அப்போதிருந்து, அவர்கள் பல முறை ஒன்றாக நேரத்தை செலவிடுவதைக் காண முடிந்தது. இது அவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்திகளை ஏற்படுத்த காரணமாக இருந்தது. இப்போது, இந்த வதந்தி ஜோடி புத்தாண்டை ஒன்றாக செலவிட தயாராக உள்ளது போல் தெரிகிறது.
காதலன் அகஸ்தியா நந்தாவுடன் சுஹானா கான்?
சமீபத்தில், ஒரு ரசிகர் சுஹானா கான் மற்றும் அகஸ்தியா நந்தாவை அலிபாக் நகரில் ஒன்றாக பார்த்ததாக இன்ஸ்டா பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இன்ஸ்டாகிராமில் அந்த ரசிகர் பகிர்ந்த வீடியோவில், இவர்கள் இருவரும் அருகருகே நடந்து சென்று படகில் ஏறுவது பதிவாகி இருந்தது. இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது.