சுச்சி ஒரு மனநேயாளி.. நிச்சயம் கம்பி எண்ணுவார்.. ஜோதிகா பண்ணுனது பெரிய தப்பு.. இது பயில்வான் தியரி
ஜோதிகாவிற்கு எதிராக சுசித்ரா ஒரு மனநோயாளி போல் பேசுகிறார். அவர் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் ஜெயிலுக்கு செல்வார் என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் எச்சரித்துள்ளார்.

கங்குவா படத்திற்கு மக்களிடமிருந்து பல தனிப்பட்ட விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக, சூர்யாவின் மனைவி என்ற அடிப்படையில் இல்லாமல், ஒரு ரசிகையாக ஜோதிகா விமர்சகர்களுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
ஜோதிகாவின் கருத்து
இதில், முதல் அரை மணி நேரம் படம் நன்றாக இல்லை. படத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், படத்தின் ஒளிப்பதிவு பாராட்டும் படி இருந்தது. 2ம் பாதியில் பெண்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் நன்றாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இங்கு வெளியாகும் இரட்டை அர்த்த வசனப் படங்களுக்கு எல்லாம் வராத பேச்சுகள் இந்தப் படத்திற்கு ஏன் வருகிறது என சில கேள்விகளையும் முன்வைத்தார்.
மோசமாக பேசிய சுசித்ரா
இந்நிலையில், பாடகி சுசித்ரா கங்குவா படம் குறித்த ஜோதிகாவின் கருத்துக்கு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ஜோதிகாவை பேரழகன் பிச்சைக்காரி எனக் கூறியதுடன் சில அசிங்கமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார். படம் இத்தனை நாள் சரிவை சந்தித்தது போதாது என இவர் பங்கிற்கு இன்னும் பேசி இருக்கிறார் எனக் கூறியதுடன், ஜோதிகா வேறு சூர்யா வேறு. இருவரையும் இணைத்துப் பேசாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.
