Thalapathy Dinesh: விஜய்-அஜித்திற்கு ‘யார் பெரிய ஆள்?’ என்கிற போட்டி - தினேஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Dinesh: விஜய்-அஜித்திற்கு ‘யார் பெரிய ஆள்?’ என்கிற போட்டி - தினேஷ்

Thalapathy Dinesh: விஜய்-அஜித்திற்கு ‘யார் பெரிய ஆள்?’ என்கிற போட்டி - தினேஷ்

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 09, 2022 06:30 AM IST

ஒரு ஹீரோ… 100 பேரை அடிப்பது எதார்த்தமில்லை, அதை மாற்றலாம் என்று நான் கூறினால், என்னை மாற்றிவிடுவார்கள். சில ஹீரோக்களே, நான் அடித்தால் 10 பேர் பறக்கனும் என்பார்கள். அப்புறம் எப்படி மாற்ற முடியும்.

சண்டைப் பயிற்சியாளர் தளபதி தினேஷ்  -கோப்பு படம்
சண்டைப் பயிற்சியாளர் தளபதி தினேஷ் -கோப்பு படம்

‘‘பள்ளி பருவத்தில் விளையாட்டில் நான் அதிக ஆர்வமாக இருப்பேன். அப்போது சென்னை ஓட்டேரியில் வசித்து வந்தேன். சினிமாவை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பள்ளியில் கராத்தே கற்று, ப்ளாக் பெல்ட் வாங்கினேன்.

படிப்பு கம்பி; கராத்தே கற்றதால் வேலை கிடைக்கவில்லை. எதார்த்தமாக ரங்கநாதன் என்ற சண்டைக்கலைஞரை சந்தித்தேன். அவர் மூலமாக தான் யூனியனில் சேரும் எண்ணம் வந்தது.

பள்ளியில் 10ம் வகுப்பு வரை தான் படித்திருந்தேன். ராமசாமி உடையார் சாராயக்கடை வைத்திருந்தார். படிப்பு வராததால், அவரிடம் வேலைக்குச் சென்றேன். அவரிடம் விசுவாசிவாக இருந்தேன். அவரும் என்னை விரும்பினார். அவரிடம் ஸ்டண்ட் யூனிட்டில் சேரும் விருப்பத்தை கூறினேன்.

அவர் தான், எம்.ஜி.ஆர்.,க்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதை எம்.ஜி.ஆர்.,யிடம் சேர்க்க இரண்டு நாள் ஆனது. எம்.ஜி.ஆர்., சிபாரி கடிதத்தில் ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன்.

நான் சிவப்பு மனிதன் தான், என்னுடைய முதல் படம். கும்பலில் நடித்தேன். முதல் படம் ரஜினி சார் படம். ஸ்டெண்ட் மேனுக்கு ஒரு மாஸ்டர் இருப்பார். அவர் சொல்வதை தான் நாம் கேட்க வேண்டும். நாம் பணியாற்றும் போது, நம்மை இயக்குனர், ஹீரோ பார்ப்பார்கள். நாம் சிறப்பாக பணியாற்றினால், அவர்கள் கவனத்தை பெறுவோம்.

தளபதி தினேஷ் - கோப்பு படம்
தளபதி தினேஷ் - கோப்பு படம்

25 ஆண்டுக்கு முன்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவு. இப்போது, ஸ்டெண்ட் கலைஞர்களுக்கு நிறைய பாதுகாப்பு இருக்கிறது. தளபதி படத்தில் சூப்பர் சுப்புராயன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தேன்.

அன்று மாஸ்டர் வருவதற்குள், மணிரத்தினம் சார் வந்துட்டார். அவர் என் முடி ஸ்டைலை பார்த்துவிட்டு, ரஜினி சாருடன் சண்டை போடும் காட்சிக்கு தேர்வு செய்தார். 2 நாள் வீனஸ் டூடியோவில் அந்த பைட் எடுக்கப்பட்டது.

அதன் பிறகு தான் சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் தனியாக சண்டையிடும் வாய்ப்புகள் குவிந்தது. பேமஸ் ஆனது தளபதி படம் தான். சந்திரமுகிக்கு முன்பு நான் நிறைய படம் மாஸ்டராக பண்ணிருந்தேன். ஆனால், சந்திரமுகி வந்த பிறகுதான் என்னை மாஸ்டராகவே தெரிந்தது.

திருப்பதி படத்தில் ரியாஸ்கானுடன் அஜித் சண்டை போடும் காட்சி. அவருக்கு முதுகு வலி இருப்பதை, சம்மந்தப்பட்ட ஆட்கள் எங்களிடம் வந்து வந்து கூறுவார்கள். ஆனால், அஜித் சார் எதுவுமே சொல்லவில்லை. அவரே செய்தார்.

சிவகாசி படத்தில் தீயிலிருந்து தாவும் காட்சி. விஜய் அப்படியே தாவினார். சாதிக்க நினைக்கும் ஹீரோக்கள் வலிகளை பார்க்கமாட்டார்கள். விஜய்யும், அஜித்தும் அப்படி தான். விஜய் சார், அஜித் சார் இருவருக்கும், உன்னை விட நான் பெரிய ஆள் ஆகனும், என்னை விட நீ பெரிய ஆள் ஆகனும் என்பது தான் அவங்க கான்சப்ட்.

அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டுமோ உழைப்பார்கள். சினிமாவுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு விபரம் தெரிந்து ரசித்தது எம்.ஜி.ஆர் தான். சண்டைக்காட்சிக்கு அவர் தான்.

பீட்டர்ஹெய்ன் என்னிடம் உதவியாளராக பணியாற்றி, இன்று என்னை விட பெரிய மாஸ்டராக மாறிவிட்டார். நல்ல உழைப்பாளி. மொழி பிரச்னை இருந்தாலும், கடினமாக உழைப்பார். அனல் அரசும் அப்படி தான். கார்த்திக் சாருக்கு டூப் அவர் தான். கார்த்தி சார் எப்போதும் தாமதமாக தான் வருவார்.

ஹீரோ வராமல் தயாரிப்பாளர் டென்ஷன் ஆவார். அந்த நேரத்தில் கார்த்திக் சாருக்கு டூப் போடுறது அனல் அரசு தான். நடிகனாக பாட்ஷாவில் தான் வெளியே தெரிந்தேன். அதுவும் ரஜினி சார் கூட வந்ததால் தான். இதுவரை ஆயிரம் படத்திற்கு மேல் நடித்துவிட்டேன்.

238 படங்களில் ஸ்டெண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறேன் . இரு மாநில விருது வாங்கியிருக்கிறேன். ஒரு ஹீரோ… 100 பேரை அடிப்பது எதார்த்தமில்லை, அதை மாற்றலாம் என்று நான் கூறினால், என்னை மாற்றிவிடுவார்கள்.

சில ஹீரோக்களே, நான் அடித்தால் 10 பேர் பறக்கனும் என்பார்கள். அப்புறம் எப்படி மாற்ற முடியும். பாலா மாதிரி எதார்த்தமாக எடுக்கிற இயக்குனர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் அப்படி இருப்பதில்லை’’

என்று அந்தபேட்டியில் தளபதி தினேஷ் கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.