தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Studio Green K.e.gnanavel Raja Interview About Production

K.E.Gnanavel Raja : ‘ஜாதகம் நல்லா இருந்தா கதை கேட்பேன்’ ஞானவேல்ராஜா ஷாக் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 22, 2023 06:40 AM IST

Suriya 42: நேரம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது. அதை நான் நம்புகிறேன். நேரம் சரியாக இருந்தால் தான் இங்கு வெற்றி கிடைக்கும்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘பத்து தல படம் வராது என்று தான் பலரும் கூறினார்கள். அதற்கு காரணம் கோவிட். கொரோனா இடைவெளிக்குப் பின் சிம்பு உடல் ரீதியாக மாறிவிட்டார். நாங்க எடுத்த படத்திற்கும், அதற்கு சுத்தமா மேட்ச் ஆகவில்லை. அப்போ ஒரு தடுமாற்றம் வந்தது. 

அதுக்கு அப்புறம் கிருஷ்ணா உள்ளே வந்தது, ரஹ்மான் சார் உள்ளே வந்தது எல்லாம் நடந்தது. சிம்பு இல்லாமல் மற்ற அனைத்து காட்சிகளையும் முடித்திருந்தோம். அவற்றை சிம்பு பார்த்தார். இந்த அளவிற்கு வந்திருக்கு என்கிற நம்பிக்கை அவருக்கு வந்து, அதன் பிறகு தான் ஸ்டார்ட் பண்ணோம். முதலில் எடுத்த எல்லா காட்சிகளையும் தூக்கி விட்டு, புதிதாக முதலில் இருந்து தொடங்கினோம். சிம்பு நன்கு ஒத்துழைத்தார். 

AAA படத்தின் போது சிம்புவை நான் விமர்சித்ததை இப்போது பகிர்கிறார்கள். எந்த உள்நோக்கத்திலும் நான் அவரை விமர்சிக்கவில்லை. எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. சிம்புவிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் அவராக இருக்கிறார். 

நல்லதோ கெட்டதோ, என்னை நம்பி ஒரு ஹீரோ டேட் கொடுத்திட்டாரு, 100 சதவீதம் அவருக்கு நான் உண்மையா இருக்கனும். எனக்கு அட்டக்கத்தியும் ஒன்னு தான், சிங்கமும் ஒன்னு தான். ப்ரமோஷனுக்கு நான் போராடுவேன். சூர்யா, கார்த்தியை தாண்டி நம்மை நம்பி ஒரு ஹீரோ டேட் கொடுப்பதை, நான் பொறுப்பாக கருதினேன். 

கண்டிப்பா சக்சஸ் கொடுத்து ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். சினிமாவில் சக்சஸ் மட்டும் தான். அதை அடைய வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்யவில்லை. பத்துதல படத்திற்கு சிம்புவின் பழைய காட்சிகளை நீக்கியதால் 8 கோடி ரூபாய் வரை நஷ்டம். ஆனால், அதை பொருட்படுத்தவில்லை. 

பத்துதல ரோலுக்கு இரண்டே பேர் தான் என்னுடைய சாய்ஸ். ஒன்னு ரஜினி சார். ரஜினி சார் இல்லையென்றால் சிம்பு. இந்த இரண்டு பேர் தான் சரியா இருப்பாங்க என்று நான் நினைத்தேன். ரஜினி சாருக்கு முயற்சித்தோம் முடியவில்லை. சிம்புவுக்கு ஓகே ஆகிவிட்டது. 

சினிமாவில் எல்லா ஹீரோவுக்கும் ‘ஹனிமூன்’ காலம் இருக்கும். ஜெயம் ரவி வந்த போது எல்லாம் ஹிட், கார்த்தி வந்த போது எல்லாம் ஹிட். இன்டஸ்ட்ரியே ஆச்சரியமா பார்த்தது. மைனஸை கூட ப்ளஸ் ஆக்கினோம். ஹனிமூன் காலம் முடிந்ததும், ஒரு சின்ன சரிவு வரும். அது முடிந்து மறுபடி ஒரு ஏற்றம், இறக்கம் வரும். 

விஜய் சார், அஜித் சாரை விட நாங்க பெரிய ஆளா என்ன? அவர்களே ஏற்றம் இறக்கங்களை பார்த்தவர்கள் தான். எல்லா ஹீரோக்கும், எல்லா தயாரிப்பாளருக்கும் இது வரும். மகாமுனி திரைப்படம், என்னுடைய சனிப்பெயர்ச்சிக்குப் பின் வந்திருந்தால், ஆஸ்கார் கூட பெற்றிருக்கும். 

எல்லா படத்திற்குப் போல தான், மகாமுனி படத்திற்கும் உழைத்தோம். நேரம் சரியில்லை அவ்வளவு தான். இப்போது எந்த இயக்குனர் வந்தாலும் முதலில் ஜாதகம் தான் வாங்குகிறேன். அடுத்த வாரம் தான் கதை கேட்கிறேன். அவர்களின் ஜாதகம் எனக்கு சேர்ந்தால் தான் கதை கேட்கிறேன். அதை வைத்து தான் இப்போது ஹிட் ஆகுமா என்பதை முடிவு செய்கிறேன்.

எல்லா நேரத்திலும் நல்ல நேரம் இருக்கும் இயக்குனரை வைத்து தான் படம் எடுக்க முடியும் என்று இல்லை. சில நேரம் இயக்குனர் நேரம் மோசமாக இருந்தால், ஹீரோவின் நேரம் நன்றாக இருந்தால் அந்த ஹீரோவை வைத்து படம் எடுக்கிறேன். அது பேலன்ஸ் ஆகிடும். எல்லாருடைய நேரமும் மோசமாக இருந்தால், கதை முடிந்துவிடும். 

நேரம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது. அதை நான் நம்புகிறேன். நேரம் சரியாக இருந்தால் தான் இங்கு வெற்றி கிடைக்கும். சூர்யாவின் முந்தைய படங்களின் பட்ஜெட் தான், சூர்யா 42 படத்தின் ப்ரொமோஷன் பட்ஜெட்டாக இருக்கும். டீசர் ரெடியாகிட்டு இருக்கு, அது வந்தா சினிமா ரசிகர்களே கொண்டாடுவார்கள்,’’
என்று அந்த பேட்டியில் ஞானவேல்ராஜா கூறியுள்ளார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.