Ashwath Marimuthu: ‘ STR 51 படத்துல நீல மோதிரம்.. சிம்பு எனக்கு ஃப்ரெண்டெல்லாம் கிடையாது..’ - அஸ்வத் மாரிமுத்து பேட்டி!
Ashwath Marimuthu: எஸ்.டி.ஆர் 51 படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காட் ஆப் லவ்’ என்பது படத்தினுடைய கேரக்டர். அது படத்தினுடைய டைட்டில் கிடையாது. - அஸ்வத் மாரிமுத்து!

Ashwath Marimuthu: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, 'ஓ மை கடவுளே’ படத்துக்குப் பின், 'டிராகன்' என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த 'டிராகன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘டிராகன்’ படம் குறித்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எஸ்.எஸ். மியூசிக் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி கொடுத்தார். அந்தப்பேட்டியில், அடுத்ததாக அவர் சிலம்பரசனுடன் இணையப்போகும் எஸ்.டி.ஆர் 51 படம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
எப்போது ரிலீஸ் ஆகும்?
அதில் அவர் பேசும் போது, ‘சிலம்பரசன் உடன் நான் இணையும் படம் அடுத்த வருடம் திரையரங்கில் வெளியாகும். ‘ஓ மை கடவுளே’ படத்திற்கும் ‘டிராகன்’ படத்திற்குமிடையே 5 வருட இடைவெளி விழுந்திருக்கிறது. அப்படியானால் இந்தப்படத்திற்கு எவ்வளவு இடைவெளி விழும் என்று கேட்கிறீர்கள்.
