JanaNayaganSecondLook: நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியுடன் வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jananayagansecondlook: நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியுடன் வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக்

JanaNayaganSecondLook: நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியுடன் வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக்

Marimuthu M HT Tamil
Jan 26, 2025 05:55 PM IST

JanaNayaganSecondLook: நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியுடன் வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக் குறித்து தகவல் அறிவோம்.

JanaNayaganSecondLook: நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியுடன் வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக்
JanaNayaganSecondLook: நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆரின் பிரபல பாடல் வரியுடன் வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக்

கவனம் ஈர்க்கும் செகண்ட் லுக்:

அதன்படி, விஜய்யின் கடைசி மற்றும் 69வது படத்தின் பெயர் 'ஜனநாயகன்' என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரே கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

காலையில் வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் பொது இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது போன்றும் அவருக்கு பின் ஆயிரக்கணக்கானோர் நின்று கோஷமிட்டு குரல் எழுப்புவது போன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இதனால், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகத்தின் கதை அரசியலைத் தொடர்பு படுத்தி தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் போஸ்டரில் நாங்கள் அவரை ’ஜனநாயகன்’ என அழைப்போம் என்றும் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு வெளியான ஜனநாயகன் செகண்ட் லுக் போஸ்டரில், நடிகர் எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் இருப்பதுபோன்று, சாட்டையுடன், சிவப்பு நிற பின்புலத்தில் விஜய் சாட்டையைச் சுழற்றுகிறார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரீ-கிரியேட் செய்த விஜய்:

விஜய் முன்னதாக மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இந்தச் சம்பவம் அவரது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்த நெய்வேலி சூட்டிங் ஸ்பாட்டில் அவரைச் சந்திக்க அவரது ரசிகர்கள் திரண்டனர். அந்த சமயத்தில் அவர் வாகனம் மீது ஏறி நின்று எடுத்த செல்ஃபி தான் சில நாட்களுக்கு ஹாட் டாப்பிக்காக இருந்தது.

இந்நிலையில், அதே போன்ற புகைப்படத்தை விஜய்யின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக தந்துள்ளனர்.

ரசிகர்களின் யூகங்கள்:

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி இருப்பினும், அதில் தன் கதை மற்றும் இயக்கத்தால் வெற்றி கண்டவர் இயக்குநர் ஹெச். வினோத். சதுரங்க வேட்டை என்னும் தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரான ஹெச். வினோத் தற்போது நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கான வேலைகளில் முழு வீச்சில்இறங்கிய நிலையில், இந்தப் படத்தின் சின்னச் சின்ன அப்டேட்களையும் மக்கள் எதிர்பார்த்து வருவதுடன், அவர்களின் ஊகங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, அரசியலுக்கு வருகை தரும் விஜய்யின் 69வது படத்தின் தலைப்பு நிச்சயம் நாளைய தீர்ப்பு என்று தான் வைக்கப்படும் என சில நாட்களாக அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பகவந்த் கேசரி ரீமேக்:

அதுமட்டுமின்றி, விஜய், தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தை தான் ரீமேக் செய்ய உள்ளார். இதுதான் தளபதி 69 படத்தின் கதை என சிலர் சொல்கின்றனர். இதற்காக அனில் ரவிபுடியுடன் பேச்சுவார்த்தை நடந்தது என்றும் கூறி வந்தனர். இதற்கிடையில், விடிவி கணேஷும் இதுகுறித்து பேசி தளபதி 69 படத்தை வைரலாக்கினார்.

தளபதி 69 விஜய்யின் கதாப்பாத்திரம் என்ன?

சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்ல இருப்பதால், நடிகர் விஜய்யின் இந்தப் படம் நிச்சயம் அரசியலை மையப்படுத்தியே நகரும் எனப் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாகவே நடிக்க உள்ளார் என சிலர் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியையும், வலிமை படத்தில் அஜித்தையும் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்து மிரட்டி இருப்பதால், ஹெச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தில் அவரை போலீஸ் அதிகாரியாகவே நடிக்க வைப்பார் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே, ஒருவேளை தளபதி 69 படத்தில் விஜய் போலீசாகத்தான் நடிக்க உள்ளாரோ எனப் பலரும் சந்தேகத்தில் உள்ளனர். இந்நிலையில் கையில் சாட்டையுடன் எம்.ஜி.ஆர் போன்று நடிகர் விஜய் தோன்றியுள்ளார். இதனால் ஜனநாயகன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.