அந்தக் கண்ணும் சிரிப்பும்.. ஆர். கே. செல்வமணி- ரோஜா ஜோடி காதலில் விழுந்த கதை தெரியுமா?
நட்சத்திர தம்பதிகளான ரோஜவும் ஆர்.கே. செல்வமணியும் எப்படி காதலித்து திருமனம் செய்து கொண்டனர் என்பது குறித்து அவர்கள் இருவருமே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

நடிகை அரசியல்வாதி என பிஸியாக வலம் வருகிறார் ரோஜா. அவரை சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் ஆர். கே. செல்வமணி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்படி காதலிக்கத் தொடங்கினர் என்பது பற்றி அவர்களே இந்தியா கிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர்.
கேள்விக் குறி தான்..
நான் தமிழ்ல முதல் படம் பண்ணுனது செம்பருத்தி. அந்த படம் பண்ணும் போது எனக்கு தமிழ் சுத்தமா தெரியாது. அந்த படத்தோட ஷூட்டிங் சமயத்துல எல்லாம் செல்வமணி சார் எந்த ஆர்ட்டிஸ்ட் கிட்டயும் பேசவே மாட்டாரு. அதுலயும் லேடி ஆர்ட்டிஸ்ட் கிட்ட பேசவே மாட்டாரு. அப்படி இருந்தவரு எனக்கு எப்படி ஐ லவ் யூ சொன்னாரு? எப்படி என்கிட்ட விழுந்தாருன்னு நிறைய பேருக்கு கேள்விக் குறியா தான் இருக்கு என ரோஜா சிரித்துக் கொண்டே கூறினார்.
அவர லவ் பண்ண இதான் காரணம்
நான் அவர பெரிய டைரக்டருன்னு லவ் பண்ணல. பொன்னுங்கள மதிக்குற விதம், அவங்கள சப்போர்ட் பண்ற விதம், அவரோட ஐடியாலஜி எனக்கு பிடிச்சு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவரு வந்து எங்க வீட்ல உங்க பொன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொன்ன அப்போ அவங்களுக்கும் சந்தோஷம் தான் என்றார் ரோஜா.
லைஃப் பார்ட்டனருக்கு ஷூட்
என்னோட முதல் படத்துக்கு போட்டோ ஷூட் பண்றாங்க. செல்வாவோட பிரண்ட்ஸ் தான் என்னோட பிரண்ட்ஸ். அப்போ அவங்க இது படத்துக்கு போட்டோ ஷூட் பண்ற மாதிரி இல்ல. உன்னோட லைஃப் பார்ட்னருக்கு போட்டோ ஷூட் பண்ற மாதிரி இருக்குன்னு அப்போவே கிண்டல் பண்ணாங்க என ரோஜா சிரித்துக்கொண்டே கூறினார்.
உறுதியாக இருந்தேன்
பின்னர் பேசிய ஆர். கே. செல்வமணி, புலன் விசாரணை படத்துக்கு அப்புறம் என் பேர் பிராண்ட்டா மாறிடுச்சு. அதுனால் இனி பெரிய ஹீரோவ வச்சு படம் பண்ணக் கூடாதுன்னு நெனச்சேன். அப்போ தான் செம்பருத்தி படத்தோட கதை ரெடி ஆச்சு. இதுக்காக ஏறக்குறைய 16 பொன்னுங்கள வச்சு போட்டோ ஷூட் எடுத்தோம். அவங்க எல்லாம் அழகா இல்லன்னு சொல்லல. என்னோட பட கேரக்டருக்கு அவங்க செட் ஆகல. அந்த சமயத்துல, இந்த படத்தோட கோ புரொடியூசர் கல்யாண ஆல்பத்துல தான் ரோஜாவ பாத்தேன். அப்போ என்னோட அசிஸ்டென்ட் கூட இவங்கள சென்னையில பா்ததா சொன்னாரு.
அந்த கண்ணும் சிரிப்பும்..
அப்புறம் கொஞ்ச நாள் இவங்கள ஃபாலோ பண்ணி புடிச்சுட்டேன். ரோஜோவோட அப்பா சினிமாவுல சவுண்ட் இன்ஜினியர், அதுனால அவருக்கு என்ன பத்தி ஒரு ஐடியா இருக்கு. ஆனா இவங்க வீட்டுல என்ன பத்தி யாருக்குமே தெரியல.
எனக்கு இவங்க போட்டோ ஷூட்டுக்கு வந்தப்போவே இவங்க கண்ணும் சிரிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா என் கேமரா மேனுக்கும் மத்த ஆர்ட்டிஸ்டுக்கும் இவங்கள பிடிக்கல. இவங்க கருப்பா இருக்குறதால அழகா இல்லன்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும் நான் ஒரு 2 நாள் ஷூட்டிங் எடுத்து பாக்கலாம்ன்னு சொல்லி இவங்கள நடிக்க வச்சேன். இருந்தாலும் இவங்கள யாருக்கும் பிடிக்கல. அதனால ஷீட்டிங்க முடிச்சுட்டு அனுப்பிட்டோம்.
முதல் மேக்கப் போட்ட ரம்யா கிருஷ்ணன்
அந்த டைம்ல எனக்கு இருந்த ஒரே பிரண்ட் ரம்யா கிருஷ்ணன் தான். அவங்ககிட்ட இதெல்லாம் சொன்னதும், ரோஜாவ வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க. அப்புறம் அவங்க தான் முதல் முதல்ல ரோஜோவுக்கு மேக்கப் எல்லாம் போட்டு, ஹேர் ஸ்டைல் எல்லாம் சொல்லி கொடுத்து எப்படி இருக்கணும்ன்னு சொன்னாங்க. இந்த மேக்கப்ல போட்ட எடுத்ததும் எல்லாருக்கும் பிடிச்சிருச்சு என ரோஜாவுடனான தன் உறவு எப்படி தொடங்கியது என்பதை செல்வமணி விளக்கினார்.
வீட்ல ஓகே சொல்லியும் லேட் கல்யாணம்
இந்தப் படம் முடியுறதுக்குள்ள நாங்க கல்யாணம் பண்ணவே ரெடி ஆகிட்டோம். எங்க 2 பேர் வீட்டுலயும் ஓகே சொல்லிட்டாங்க. ஆனா, செல்வமணி அவரோட தம்பிங்கள செட்டில் பண்ணிட்டு கல்யாணம் பண்றேன்னு சொன்னதால எங்க கல்யாணம் லேட்டா நடந்தது என ரோஜா கூறினார்.
