அலுமினிய தொழிற்சாலைக்கு வந்த மெளலி படை.. கென்யாவில் ஷூட்டிங்.. ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் பூஜை! - வீடியோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அலுமினிய தொழிற்சாலைக்கு வந்த மெளலி படை.. கென்யாவில் ஷூட்டிங்.. ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் பூஜை! - வீடியோ!

அலுமினிய தொழிற்சாலைக்கு வந்த மெளலி படை.. கென்யாவில் ஷூட்டிங்.. ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் பூஜை! - வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 02, 2025 02:39 PM IST

ராஜமெளலி உடன் படத்தின் கதாபாத்திரத்திற்காக, தன்னை மாற்றிக்கொண்ட மகேஷ்பாபு, தன் தோற்றமானது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருந்தார்.

அலுமினிய தொழிற்சாலைக்கு வந்த மெளலி படை.. கென்யாவில் ஷூட்டிங்.. ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் பூஜை! - வீடியோ!
அலுமினிய தொழிற்சாலைக்கு வந்த மெளலி படை.. கென்யாவில் ஷூட்டிங்.. ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் பூஜை! - வீடியோ! (X/Instagram)

இந்த விழாவில் மகேஷ்பாபு, ராஜமெளலி, ராஜமெளலி மனைவி ரமா ராஜமெளலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் கதாபாத்திரத்திற்காக, தன்னை மாற்றிக்கொண்ட மகேஷ்பாபு, தன் தோற்றமானது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருந்தார். 

பூஜை குறித்தான செய்திகள் வெளியே வந்த உடன், மகேஷ்பாபுவின் ரசிகர்கள், கடந்த 2010 ம் ஆண்டு இறுதியாக தானும், ராஜமெளலியும் இணைவதாக பதிவிட்ட பதிவை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

 

 

என்ன ஜானர்

இந்தப்படம்  ‘இந்தியானா ஜோன்ஸ்’ திரைப்பட பாணியில் ஆக்‌ஷன் சாகச திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, ராஜமெளலியின் அப்பாவான விஜேந்திரபிரசாத், கொடுத்த பல்வேறு நேர்காணல்களில் மகேஷ் பாபுவுடன் இணையும் திரைப்படத்திற்காக, ராஜமெளலி கென்யாவின் பல்வேறு பகுதிகளில் லொகேஷன்களை தேடிக்கொண்டிருப்பதாக பேசி இருந்தார். கடந்த ஆண்டு மத்தியிலேயே இந்தப்படம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நேரம் எடுத்துக்கொண்டது.இந்தப்படத்தின் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பானில் நடந்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் சிறப்புக் காட்சியின் போது படம் குறித்து பேசிய ராஜமௌலி, "அவரது பெயர் மகேஷ் பாபு, அவர் ஒரு தெலுங்கு நடிகர். உங்களில் பலருக்கு அவரை ஏற்கனவே தெரியும் போல் தெரிகிறது. 

அவர் மிகவும் அழகானவர்

அவர் மிகவும் அழகானவர். அவரும் நானும் இணையும் படத்தை கொஞ்சம் சீக்கிரமாக முடித்து, ரிலீஸூக்கு முன்னர் அவரை இங்கே அறிமுகம் செய்கிறேன். உங்களுக்கு அவரை பிடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

ராஜமௌலி கடைசியாக இயக்கிய படம் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த RRR ஆகும். இந்தப்படம் உலகளவில் பாராட்டுக்களைப் பெற்றது. மகேஷ் கடைசியாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் குண்டூர் காரம் படத்தில் நடித்தார். இந்தப்படம் கடந்த சங்கராந்தி அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.