SS Rajamouli: 1000 கோடி பட்ஜெட்.. ஹாலிவுட் ஸ்டைல்.. “ மகேஷ் பாபுதான் ஹீரோ.. அவர சீக்கிரமே” - ஜப்பானில் பேசிய ராஜமெளலி!
கடந்த ஜனவரி மாதம் ராஜமெளலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜேந்திரபிரசாத், மகேஷ் பாபு, ராஜமெளலி இணையும் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்தப்படத்தின் பட்ஜெட் 1000 கோடி என சொல்லப்படுகிறது.
ஆர்.ஆர். ஆர் படத்தின் சிறப்பு திரையிடலுக்காக ஜப்பான் சென்ற ராஜமெளலி மகேஷ் பாபுவுடன் தான் இணையும் திரைப்படம் தொடர்பான அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
நிகழ்ச்சியில் ராஜமெளலி பேசும் போது, “ நாங்கள் எங்களுடைய அடுத்தப்படம் தொடர்பான வேலைகளை தொடங்கி விட்டோம். அந்தப்படம் தொடர்பான எழுத்துப்பணிகள் நிறைவடைந்து விட்டன. நாங்கள் படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகளில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். படத்தின் ஹீரோவை நாங்கள் தேர்வு செய்து விட்டோம். அவர் மகேஷ்பாபு. அவரை எல்லோருக்கும் தெரியும். அவர் மிகவும் அழகாக இருப்பார். படத்தை கொஞ்சம் வேகமாக முடித்து படம் வெளியாகும் நேரத்தில் அவரை இங்கு அழைத்து வந்து உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். உங்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” என்று பேசினார்.
கடந்த ஜனவரி மாதம் ராஜமெளலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜேந்திரபிரசாத், மகேஷ் பாபு, ராஜமெளலி இணையும் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்தப்படத்தின் பட்ஜெட் 1000 கோடி என சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் வேலைகளுக்காக மகேஷ் பாபு ஜெர்மனி சென்று இருப்பதாகவும், இந்தப்படத்தின் கதை ஹாலிவுட் திரைப்படமான இந்தியானா ஜோன்ஸ் போல இருக்கும் என்றும் இதில் ஹனுமன் கதாபாத்திரத்திரத்திற்கு முக்கியப்பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
படம் ஒன்றிற்கு 60 முதல் 80 கோடியை சம்பளமாக பெறும் மகேஷ் பாபுவிற்கு இந்தப்படத்தில் அதிகபட்ச சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு ராஜமெளலியின் ஆதர்ச இசையமைப்பாளரான கீரவாணி இசையமைக்கிறார். துர்கா ஆர்ட்ஸ் நாராயணா இந்தப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர்.
இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்தப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்த வரவேற்பை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியானது. அங்குள்ள மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர் அங்கும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக ஜப்பானில் முன்னதாக வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என்று சாதனை படைத்திருந்த ரஜினியின் முத்து படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படமாக ஆர்.ஆர்.ஆர் மாறியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்