SS Rajamouli: ஜப்பானில் நிலநடுக்கம்.. 28 வது மாடியில் சிக்கிய ராஜமெளலி..அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மகன்!
ஜப்பானில் தற்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தரை மெதுவாக நகர ஆரம்பித்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணரவே எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது மகன் கார்த்திகேயா மற்றும் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா ஆகியோர் 2022 -ம் ஆண்டு வெளியான RRR படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக ஜப்பானில் சென்று இருக்கின்றனர்.
அவர்களின் பயணம் ரசிகர்களைச் சந்திப்பது, அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைந்து செய்யும் திரைப்படம் குறித்தான அப்டேட்டுகளை வழங்குவது என திட்டமிடப்பட்டு இருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு பயங்கரமான அனுபவத்தை அவர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் கார்த்திகேயா, “ஜப்பானில் தற்போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தரை மெதுவாக நகர ஆரம்பித்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணரவே எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது.
நான் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த போது, சுற்றியிருந்த ஜப்பானியர்கள் ஏதோ மழை பெய்ய தொடங்கியது போல அசையாமல் இருந்தனர்.” என்று பதிவிட்டு இருந்தார்.
அத்துடன் ஜப்பானிய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்த எச்சரிக்கை செய்தி தொடர்பான போட்டோவையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
ரசிகரை சந்தித்தார் ராஜமௌலி
திங்களன்று, ஆர்.ஆர்.ஆர் சிறப்புத் திரையிடலுக்குப் பிறகு, ராஜமௌலி அவரும் அவரது மனைவி ராமாவும் 83 வயது ரசிகரை கட்டிப்பிடிக்கும் படங்களை பகிர்ந்து இருந்தது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
முன்னதாக ஆர்.ஆர். ஆர் படத்தின் சிறப்பு திரையிடலுக்காக ஜப்பான் சென்ற ராஜமெளலி மகேஷ் பாபுவுடன் தான் இணையும் திரைப்படம் தொடர்பான அப்டேட்டை கொடுத்தார்.
நிகழ்ச்சியில் ராஜமெளலி பேசும் போது, “ நாங்கள் எங்களுடைய அடுத்தப்படம் தொடர்பான வேலைகளை தொடங்கி விட்டோம். அந்தப்படம் தொடர்பான எழுத்துப்பணிகள் நிறைவடைந்து விட்டன. நாங்கள் படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகளில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். படத்தின் ஹீரோவை நாங்கள் தேர்வு செய்து விட்டோம். அவர் மகேஷ்பாபு. அவரை எல்லோருக்கும் தெரியும். அவர் மிகவும் அழகாக இருப்பார். படத்தை கொஞ்சம் வேகமாக முடித்து படம் வெளியாகும் நேரத்தில் அவரை இங்கு அழைத்து வந்து உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். உங்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” என்று பேசினார்.
கடந்த ஜனவரி மாதம் ராஜமெளலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜேந்திரபிரசாத், மகேஷ் பாபு, ராஜமெளலி இணையும் படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்தப்படத்தின் பட்ஜெட் 1000 கோடி என சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் வேலைகளுக்காக மகேஷ் பாபு ஜெர்மனி சென்று இருப்பதாகவும், இந்தப்படத்தின் கதை ஹாலிவுட் திரைப்படமான இந்தியானா ஜோன்ஸ் போல இருக்கும் என்றும் இதில் ஹனுமன் கதாபாத்திரத்திரத்திற்கு முக்கியப்பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
படம் ஒன்றிற்கு 60 முதல் 80 கோடியை சம்பளமாக பெறும் மகேஷ் பாபுவிற்கு இந்தப்படத்தில் அதிகபட்ச சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு ராஜமெளலியின் ஆதர்ச இசையமைப்பாளரான கீரவாணி இசையமைக்கிறார். துர்கா ஆர்ட்ஸ் நாராயணா இந்தப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்